வெந்தயம் ஆரோக்கியத்தின் களஞ்சியம் தான்… ஆனால் அளவிற்கு மிஞ்சினால் ஆபத்து..!
அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. எனவே அவை ஆரோக்கியத்தின் சுரங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. வெந்தயத்தில் ஃபோலிக் ஆசிட், ரிபோஃப்ளேவின், காப்பர், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து , மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6, சி மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது, கொலஸ்ட்ரால் அளவை சீராக வைப்பது, தாய்ப்பால் உற்பத்தி, உடல் பருமனை குறைப்பது, செரிமான ஆரோக்கியம் உள்ளிட்ட பல நன்மைகளை வெந்தய விதைகள் வழங்குகின்றன.
ஆனால் இதனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது உடல் நலத்துக்குக் கேடு.
எனவே, வெந்தயத்தை குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். வெந்தயத்தை அதிகமாக உட்கொள்வதால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
நீரிழிவும் வெந்தயமும்
சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள், ஆனால் வெந்தயத்தை அதிகமாக உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கும் ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? நீரிழிவு நோயாளிகள் அளவுக்கு அதிகமாக வெந்தயத்தை சேர்த்து கொள்வது அவர்களது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை மிக ஆபத்தான அளவில் குறைக்க வழிவகுக்கும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் மருத்துவரிடம் வெந்தயம் சாப்பிடலாமா, எவ்வளவு சாப்பிட வேண்டும் போன்ற விஷயங்களை கலந்தாலோசித்த பிறகு வெந்தயத்தை எடுத்து கொள்வது நல்லது..
இதய நோயும் வெந்தயமும்
வெந்தயம் உடலில் பொட்டாசியம் அளவை இயற்கையாகவே குறைக்கும் தன்மையை கொண்டிருக்கின்றன. உடலில் அதிகமாக காணப்படும் பொட்டாசியம் அளவை குறைக்க மருந்துகளை உட்கொள்பவர்கள் அல்லது இதய நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தங்கள் டயட்டில் அதிக அளவு வெந்தயம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அதிலும் குறைந்த ரத்த அழுத்தம் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வெந்தயம் எடுத்து கொள்ள கூடாது என்கிறார்கள் நிபுணர்கள்.