வெந்தய நீர்: பாடாய் படுத்தும் பல நோய்களின் வில்லன், தினமும் குடிங்க
இவற்றால் நம்மை தினமும் பாடாய் படுத்தும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். இந்த மசாலாப் பொருட்களில் முக்கியமான ஒன்று வெந்தயம். வெந்தயம் உணவின் சுவையை இரட்டிப்பாக்க உதவுகிறது.
வெந்தயத்தில் ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits of Fenugreek)
வெந்தயம் பொதுவாக மசாலா பொருளாகவும் மூலிகை மருந்தாகவும் பயன்படுத்தப்படும் ஒரு தாவரமாகும். இதன் விதைகள் சற்று கசப்பான சுவை கொண்டவை. இவை பெரும்பாலும் இந்திய சமையலில் பல உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெந்தயத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்பு, மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்துள்ளன. வெந்தய நீரால் கிடைக்கும் நன்மைகளில் சீரான செரிமானம், இரத்த சர்க்கரை அளவின் கட்டுப்பாடு, வீக்கத்தைக் குறைக்க உதவும் திறன் போன்ற நன்மைகளும் அடங்கும். வெந்தய நீரை குடிப்பதால் நம் உடலில் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். மேலும் வெந்தய நீரை உட்கொள்ளும் முறை பற்றியும் இந்த பதிவில் காணலாம்.
வெந்தயம் சாம்பார், பொரியல், கலந்த சாதங்கள், ஊறுகாய் என பல வித உணவுகளின் சுவையை அதிகரிக்கின்றது. சுவையை அதிகரிப்பதுடன் இதில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. வெந்தயம் (Fenugreek), வெந்தய கீரை போலவே வெந்தய நீரிலும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வெந்தயம் பொதுவாக மசாலா பொருளாகவும் மூலிகை மருந்தாகவும் பயன்படுத்தப்படும் ஒரு தாவரமாகும். இதன் விதைகள் சற்று கசப்பான சுவை கொண்டவை. இவை பெரும்பாலும் இந்திய சமையலில் பல உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
வெந்தயத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்பு, மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்துள்ளன. வெந்தய நீரால் கிடைக்கும் நன்மைகளில் சீரான செரிமானம், இரத்த சர்க்கரை அளவின் கட்டுப்பாடு, வீக்கத்தைக் குறைக்க உதவும் திறன் போன்ற நன்மைகளும் அடங்கும். வெந்தய நீரை தினமும் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பல நோய்கள் குணமாகும்.