மூஸ்லீம் நாடுகளுக்கிடையே மூண்ட போர்.. ஈரானுக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான்.. 9 பேர் பலியான சோகம்..!
17) இரவு, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குஹி சாகிப் பகுதியில் உள்ள ஜெய்ஷ் அல்-அடல் தீவிரவாத குழுக்களின் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை குறிவைத்து தற்காப்பு நடவடிக்கையாக இந்த தாக்குதலை நடத்தியதாக ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
ஆனால் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், ஈரான் தூதரை இஸ்லாமாபாத்தில் இருந்து வெளியேற்றியதுடன், ஈரானில் உள்ள பாகிஸ்தான் தூதரை திரும்ப அழைத்தது. இந்த தாக்குதல் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என பாகிஸ்தான் பகிரங்கமாக எச்சரித்திருந்தது. இந்நிலையில், ஈரானின் சபார், தென்மேற்கு ஈரானின் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று காலை தாக்குதல் நடத்தின. ஆளில்லா விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகள் மூலமாகவும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன, இதில் அப்பகுதியில் உள்ள சில வீடுகள் அழிக்கப்பட்டன.
இதில் 4 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். “எந்த ஈரானிய குடிமக்களோ அல்லது ராணுவ வீரர்களோ குறிவைக்கப்படவில்லை. அங்கு செயல்படும் பயங்கரவாத குழுக்களை குறிவைத்தோம். பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் விளக்கம் அளித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக வடகிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் – ஈரான் மோதல் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.