உக்ரைனுக்கு எதிராக சண்டையிட்டே ஆகணும்! மேயரை நிபந்தனையுடன் விடுவித்த ரஷ்யா

ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் மேயர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு எதிரான சண்டையில் ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேசமயம், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால் கைதான குற்றவாளிகளை ரஷ்யா போரில் ஈடுபடுத்தி வருகிறது.

அவர்களில் பலருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி, உக்ரைனுக்கு எதிராக சண்டையிட ரஷ்யா அனுப்பி வைக்கிறது.

இதற்கிடையில், ரஷ்யாவின் Vladivostok நகர முன்னாள் மேயரான Oleg Gumenyuk லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Oleg Gumenyuk

இந்த நிலையில், Oleg Gumenyuk உக்ரைனில் சண்டையிட ஒப்புக்கொண்டதால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவரது வழக்கறிஞர் ரஷ்ய செய்தி நிறுவனமான Kommersant தெரிவித்தார்.

Oleg Gumenyuk ரஷ்யாவின் இராணுவத்துடன் சண்டையிடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக தெரிய வந்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *