மூன்றே வினாடிக்குள் மறைந்திருக்கும் சாண்டாவை கண்டுபிடிங்க பார்க்கலாம்! இன்றைய சேலஞ்ச்!
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் நான்கு தினங்கள் மட்டுமே உள்ளன. பண்டிகை காலத்தில் ஆப்டிகல் இல்யூஷன் சேலஞ்சை சற்று சுவாரஸ்யமாக்குவதற்காக அதனை சார்ந்த டாஸ்க்கை உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் கிறிஸ்துமஸ் காலுறைகள் நிறைய உள்ளன. ஆனால், அவற்றில் எங்கோ ஒரு மினி சாண்டா மறைந்துள்ளது. 3 வினாடிக்குள் சாண்டாவைக் கண்டறிவதே உங்களுக்கான சேலஞ்ச்.
அதிக IQ மற்றும் கூர்மையான பார்வை உள்ளவர்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் சாண்டாவைக் கண்டுபிடிக்க முடியும். சரி, உங்களுக்கு க்லூவும் கொடுக்கிறோம். படத்தில் இருக்கும் காலுறைகளுக்குள் ஒரு சிவப்பு தொப்பியை நீங்கள் கண்டுபிடித்தால் சாண்டாவை கண்டுபிடித்துவிடலாம்.
சரி சேலஞ்சை தொடருவோமா?
உங்களுக்கான நேரம் தொடங்குகிறது…
ஒன்று…
இரண்டு…
மூன்று…
உங்களுக்கான நேரம் முடிந்துவிட்டது. கொடுக்கப்பட்ட நேரத்தில் மினி சாண்டாவைக் கண்டுபிடித்தீர்கள் என நம்புகிறோம். மறுபுறம், சிலரால் கண்டுபிடிக்க முடியாமல் இருந்திருக்கலாம். பரவாயில்லை.. உங்களுக்கான விடையை நாங்கள் தருகிறோம்.
கீழே உள்ள படத்தில் சிவப்பு நிற வட்டத்தில் உள்ளது மினி சாண்டா!