நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக முன்மொழியப்பட்ட முதல் இந்திய வம்சாவளி மாஜிஸ்திரேட்
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சங்கேத் ஜெய்சுக் புல்சாராவை () ஜனாதிபதி ஜோ பைடன் முன்மொழிந்துள்ளார்.
இதனை அமெரிக்க ஜனாதிபதி மாளிகை வெள்ளை மாளிகை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
புல்சாரா தற்போது அதே நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருகிறார். அவர் 2017 முதல் அந்தப் பதவியில் இருந்து வருகிறார்.
இதன் மூலம் இந்தப் பதவியை வகிக்கும் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். சமீபத்தில் அதே நீதிமன்றத்தில் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா மற்றும் கென்யாவில் இருந்து குடியேறிய தம்பதியரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது தந்தை நியூயார்க் நகராட்சியில் பொறியாளராக பணிபுரிகிறார், அவரது தாயார் செவிலியராக பணிபுரிகிறார்.