லண்டனுக்கு ஐந்து பெருவெள்ள அபாய எச்சரிக்கைகள்… பாதிப்பு அபாயம் உள்ள இடங்கள் குறித்த விவரம்
லண்டனில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ஐந்து பெருவெள்ள அபாய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு சாத்தியம் என்பது குறித்து சுற்றுச்சூழல் ஏஜன்சி எச்சரித்துள்ளது குறித்த விவரம் இச்செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த பகுதிகள்பாதிப்புக்குள்ளாகலாம்?
லீ நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக Walthamstow, Tottenham மற்றும் எட்மண்டன் ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதைக் குறிக்கும் வகையில் பெருவெள்ள அபாய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், Goodmayes மற்றும் Pinner ஆகிய பகுதிகளும் அபாயத்தில் உள்ள பகுதிகளாக குறிக்கப்பட்டுள்ளன. தென்மேற்கு லண்டனில் ஆற்று நீர் மட்டம் உயரும் அபாயம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று, அதாவது, பிப்ரவரி 9ஆம் திகதி காலை முழுவதும் கனமழையால் லண்டன் பாதிப்புக்குள்ளாகும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நண்பகலில் அது முடிவுக்கு வரலாம் என்றாலும், மாலை 6 மணிக்கு மேலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.