இன்னும் அஞ்சே நாள்தான்! எழுதி வெச்சுக்கங்க! இனி பால் வாங்க கூட மக்கள் இந்த எலெக்ட்ரிக் கார்லதான் போக போறாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று டாடா பன்ச் இவி (Tata Punch EV). இது இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள 4வது எலெக்ட்ரிக் கார் (Electric Car) என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV) மற்றும் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) என 3 எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் வரவுள்ள டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காருக்கு, முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன.
விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் மொத்தம் 5 வேரியண்ட்களில் (Variants) விற்பனை செய்யப்படவுள்ளது. அவை ஸ்மார்ட் (Smart), ஸ்மார்ட்+ (Smart+), அட்வென்ஜர் (Adventure), எம்பவர்டு (Empowered) மற்றும் எம்பவர்டு+ (Empowered+) ஆகியவை ஆகும்.
அதே நேரத்தில் 5 ட்யூயல் டோன் மற்றும் 4 மோனோடோன் என மொத்தம் 9 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படவுள்ளது. டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சமில்லை.
டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், இலுமினேட்டட் டாடா லோகோ உடன் கூடிய 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆகியவை டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் முக்கியமான வசதிகள் ஆகும்.
இவை எல்லாம் தவிர, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், சன்ரூஃப், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற வசதிகளும் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டாடா பன்ச் இவி வரும் ஜனவரி 17ம் தேதி (January 17) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காருக்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரை பற்றிய ஒரு சில விஷயங்கள் இன்னும் நமக்கு தெரியாமல் உள்ளது. அதில் பேட்டரி ஆப்ஷன்கள் (Battery Options) ஒன்று.
டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில், மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவற்றின் திறன் மற்றும் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அதே போல் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் விலை (Price) எவ்வளவு? என்பதும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த 2 மிக முக்கியமான தகவல்களும், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளான வரும் ஜனவரி 17ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் இந்த தகவல்களை தெரிந்து கொள்வதற்கு உங்களை போலவே, நாங்களும் மிகவும் ஆர்வமுடன் காத்து கொண்டுள்ளோம்.