பிக்சட் டெபாசிட் Vs பங்குகளில் முதலீடு.. எது பெஸ்ட்..?!

முதலீடு என்று வந்துவிட்டால் சந்தையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இதில் இரண்டு பிரபலமான முதலீடு வாய்ப்புகள் என்றால் பிக்சட் டெபாசிட், பங்குச் சந்தை.
இந்த இரண்டு முதலீடுகளுமே அதற்கே உரிய சாதகங்கள் மற்றும் பாதகங்களைக் கொண்டுள்ளன.பிக்சட் டெபாசிட்களை பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் விரும்புவதற்குக் காரணம் அதிலிருந்து உத்தரவாதமாக வரக்கூடிய லாபம். பங்குகள் போல மார்க்கெட் ஏற்றத்தாழ்வுகளைப் பொருத்து லாபம் இருக்காது. பிக்சட் டெபாசிட்களுக்கு குறிப்பிட்ட நிலையான வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் டெபாசிட் காலம் வரை வருமானம் நிலையாக இருக்கும். பிக்சட் டெபாசிட்கள் அதன் அசலை பாதுகாக்கும் அம்சம் கொண்டவையாகும்.பங்குகள் மதிப்பு அடிக்கடி மாறும் நிலையில் பிக்சட் டெபாசிட்களில் அந்த அபாயம் இருக்காது. பங்குகளுடன் ஒப்பிட்டால் பிக்சட் டெபாசிட்கள் குறைந்த அபாயங்களைக் கொண்ட முதலீடாகும். அசலை இழக்கும் வாய்ப்பு மிகக் குறைவு.வழக்கமான வருவாய் பிக்சட் டெபாசிட்கள் நிலையான வருவாயைத் தரும்.நிலையான வருமானத்தை விரும்பும் நபர்களுக்கு இந்த திட்டம் மிகவும் நல்லது.பிக்சட் டெபாசிட்களில் முதலீடு செய்வதற்கு பெரிய புத்திசாலித்தனம் எல்லாம் தேவையில்லை. பைனான்சியல் மார்க்கெட் பற்றி நிபுணத்துவம் தேவையில்லை.பிக்சட் டெபாசிட்களை வேண்டும்போது முதிர்ச்சிக் காலத்துக்கு முன்பே திரும்பப் பெற்றுவிடலாம். இதுபோன்று செய்தால் சில நேரங்களில் அபராதங்கள் விதிக்கப்படலாம்.பிக்சட் டெபாசிட்டின் ஒரு பகுதியை பங்குகளில் முதலீடு செய்தால் மார்க்கெட் அபாயங்கள் குறைவாகவே இருக்கும். சில நிபந்தனைகளின்கீழ் பிக்சட் டெபாசிட்களுக்கு வரி விலக்குகளும் கிடைக்கும்.எடுத்துக்காட்டாக 5 வருட கால டெபாசிட்களுக்கு வருடத்துக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி சட்டப்பிரிவு 80சி-யின் கீழ் விலக்கு கிடைக்கும். டெபாசிட் காலத்தின் போது நிலையான வருவாய் பிக்சட் டெபாசிட்களுக்குக் கிடைக்கும். அதிக ரிஸ்க், அதிக ரிவார்டு முதலீடுகளை விட ஸ்திரத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கும் இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு நல்லதாகும்.கடைசியாக பிக்சட் டெபாசிட்கள் மன நிம்மதியைத் தரும். உறுதியான வருவாய், அசலுக்குப் பாதுகாப்பு, குறைந்த அபாயங்கள் போன்றவை பிக்சட் டெபாசிட் திட்டங்களின் சிறப்பான அம்சங்களாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *