குளிர் காலத்திலும் மல்லிகைச் செடியில் பூக்கள் பூத்துக் குலுங்க: புஷ்பவனம் குப்புசாமி வீடியோ
மல்லிகை விரும்பாத பெண்கள் உண்டா? என்னதான் மேக்கப் செய்து, நகைகள் அணிந்தாலும் புடவை, மல்லிகை பூவை விட பெண்களுக்கு பேரழகு தரும் எதுவும் இல்லை.
உங்கள் வீட்டில் மல்லிகைச் செடி வளர்க்கிறீர்களா? அப்படி என்றால் பெரும்பாலும் குளிர் காலங்களிலும், அதிக மழைக் காலங்களிலும், குறிப்பாக செப்டம்பர் முதல் ஜனவரி-பிப்ரவரி மாதங்கள் வரை அதன் பூக்கும் தன்மை குறைந்து விடும் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
ஒருமுறை பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி, தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவில் குளிர்காலத்திலும் மல்லிகைச் செடியில் பூக்கள் பூத்துக் குலுங்க சில குறிப்புகளை பகிர்ந்து கொண்டார்.
இந்த குளிர்காலத்துல மல்லிப்பூ பூக்குறது அபூர்வம். ஆனா இங்க இப்போக்கூட மல்லிப்பூ அவ்ளோ மொட்டு விட்டுருக்கு. எல்லாம் நம்ம பராமரிக்குற விதம் தான். மல்லிப்பூச் செடிக்கு அதிகமா தண்ணி விடக்கூடாது. இயற்கை உரம் போடணும். குறிப்பா மண்புழு உரம் போடுங்க..
பூ பூத்ததுக்கு அப்புறம் கிள்ளி விடணும். அப்போதான் அதுல இருந்து மறுபடி துளிர்த்து மொட்டுவிடும். நிறைய இலை இருந்தா பூக்காது. அப்பப்போ கொஞ்சம் இலைகளை பிச்சு விட்டா மொட்டோட வரும். மல்லிச்செடிக்கு வைத்தியம் இதுதான், என்று புஷ்பவனம் குப்புசாமி அந்த வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.