Food Reduces Anxiety : உங்கள் மனதை அமைதிப்படுத்த உணவுகளே போதும்! – இவற்றை முயற்சி செய்யுங்கள்!

சில உணவுகளை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உங்கள் பயம், பதற்றம் விலகி மனம் அமைதியடையும். சில உணவுகள் உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது. இந்த உணவுகள் உங்கள் மனநிலையை சிறப்பாக்கும் தன்மை கொண்டவை. உங்கள் பயத்தின் அளவை குறைக்கிறது. உங்கள் மனதை அமைதிப்படுத்தும் உணவுகளை தெரிந்துகொள்ளுங்கள்.

வாழைப்பழங்கள்

வாழைப்பழத்தில் வைட்டமின் பி6 உள்ளது. இதில் மெக்னீசியம், டிரிப்டோஃபான் ஆகியவை உள்ளன. இவை உங்கள் ஒட்டுமொத்த மனநிலையையும் மாற்றி அமைத்து, உங்களுக்கு அமைதியை ஏற்படுத்துகிறது. வாழைப்பழத்தில் உள்ள டிரிப்டோபாஃன், செரோடினின் உற்பத்தியை அதிகரித்து, மனதில் மகிழ்ச்சி ஏற்பட வழிவகுக்கிறது.

முட்டை

தினமும் காலையில் வேக வைத்த முட்டை சாப்பிடுவது மனஅழுத்தத்தை போக்க உதவுகிறது. முட்டையில் வைட்டமின் டி, டிரிப்டோபஃன் மற்றும் சோலைன் சத்து உள்ளது. உடலில் வைட்டமின் டி சத்து குறையும்போதுதான் பயம், பதற்றம் ஏற்படுகிறது. எனவே உங்கள் நாளின் துவக்கத்தில் நல்ல மனநிலையை உருவாக்க முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

கிரீன் டீ

நீங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், கிரீன் டீயை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மூலிகை டீயில் எல்தீனைன் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் மனஅழுத்தத்தை குறைக்க உதவுகிறது. பயத்தைபோக்கி அறிவாற்றல் பெருகவும் உதவுகிறது.

டார்க் சாக்லேட்

பயம் மற்றும் பதற்றத்தில் இருந்து டார்க் சாக்லேட் உங்களுக்கு தேவையான அளவு நிவாரணத்தை கொடுக்கிறது. டார்க் சாக்லேட்டில் பாலிஃபினால்கள் உள்ளது. அது எண்டோர்ஃபின்களை வெளியிடுகிறது. அது செரோடொனின் உருவாவதற்கு உதவி, நரம்புகளை அமைதிப்படுத்துகிறது.

சாமந்திப்பூ டீ

சாமந்தி பூவில் இருந்து தயாரிக்கப்படும் டீ மன அழுத்தத்தில் இருந்து உங்களை விடுவிக்கிறது. அதில் உங்களை குணப்படுத்தும் பொருட்கள் உள்ளன. அது பயம் மற்றும் பதற்றத்தில் இருந்து உங்களை விடுவிக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *