அடி தூள்… பெண் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு… அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கூற்றுப்படி, சாலை கட்டுமானத்தில் ஈடுபட்டு வரும் பெண் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு 2 பிரசவங்களுக்கு 6 வார ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படும். பெண்களுக்கு தொழில்களில் உடல் ரீதியாக தேவைப்படும் ஆதரவுக்கான அதிகாரம் அளிப்பதை இதன் மூலம் உறுதி செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார். அதே போல் 2 பிரசவங்களுக்கு மேல் மூன்றாவது பிரசவம் இருந்தால் அவர்களுக்கான தேவைகளின் அடிப்படையில் விடுப்பு பரிசீலிக்கப்படும். சாலை ஒப்பந்தம் செய்யும் முதலாளிகள் அவர்களுக்கு 12 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை வழங்க வேண்டும் என ஸ்மிரிதி ரானி அறிவித்துள்ளார். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் பெண்கள் அதிகாரத்தை வலுபடுத்தல் இவைகளின் மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது குறித்து ஸ்மிருதி ராணி ” இந்தியா முழுவதும் உள்ள பெண் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு முதலாளிகளால் அவர்களுக்கு 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட வேண்டும். இது புரட்சிகரமான செயல் அல்ல . பெண்களின் அவசிய தேவை என்பதை உணர வேண்டும்” எனக் கூறியுள்ளார். பிரசவம் மட்டுமின்றி கருச்சிதைவு ஏற்பட்டால், கருச்சிதைவு ஏற்பட்ட நாளிலிருந்து 6 வாரங்களுக்கு மகப்பேறு சலுகைகளுக்கு சமமான விடுப்பும் ஊதியத்துடன் அளிக்க வேண்டும்” என ராணி ஸ்மிரிதி தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பெண் கட்டுமானப் பணியாளர்களுக்கான விடுப்பை உறுதி செய்கிறது” அதே போல் இரவு நேரப் பணிகளில் பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை முதலாளிகள் ஏற்படுத்தி தர வேண்டும். பிக்-அப் மற்றும் டிராப்-ஆஃப் என அவர்களுக்கான போக்குவரத்தையும் எளிதாக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கட்டுமான தளத்தில் பணிபுரியும் ஒவ்வொரு பெண் பணியாளரின் ஊதியத்தை அவர்களது கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *