2,999ரூபா இருந்தா ஸ்கூட்டரை இணைப்பு வசதி கொண்டதாக மாத்தலாம்.. ஸ்டார்ட் செய்வது-லாக் செய்வது இனி ரொம்ப சுலபம்
ஐவூமி, இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிறுவனமே வாகன மேம்படுத்தல் திட்டம் எனும் புதிய திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இதன் வாயிலாக அந்நிறுவனம் இணைப்பு வசதி இல்லா வாகனங்களில் இணைப்பு வசதியை வழங்க இருக்கின்றது.
2 ஆயிரத்து 999 ரூபாய் எனும் குறைவான கட்டணத்தில் இந்த மேம்படுத்தலை அது செய்ய இருக்கின்றது. இந்த திட்டம் நிறுவனத்தின் பழைய கஸ்டமர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், ஐவூமி நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும் என்பதும் இங்கு கவனிக்கத்தகுந்தது.
நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளாக ஜீட் எக்ஸ், எஸ்1 மற்றும் எஸ்1 2.0 ஆகியவை இருக்கின்றன. இவற்றிற்காகவே வாகன மேம்படுத்தல் திட்டம் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த திட்டத்தின் வாயிலாக என்னென்ன இணைப்பு வசதிகள் வழங்கப்பட உள்ளன என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பியிருக்கக் கூடும்.
நிறுவனம், ப்ளூடூத் இணைப்பு, என்எஃப்சி (Near Field Communication), திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் சிஸ்டம், சாவியே இல்லாமல் வாகனத்தை ஸ்டார்ட் செய்தல் – லாக் செய்தல் உள்ளிட்ட ஏகப்பட்ட வசதிகளை ஐவூமி வழங்க இருக்கின்றது.
இதுதவிர, செல்போன் செயலி வாயிலாக கட்டுப்படுத்தும் வசதியும் இதில் வழங்கப்பட இருக்கின்றது. மேலும், ஸ்மார்ட் செக்யூரிட்டி போன்ற பலதரப்பட்ட சிறப்பம்சங்கள் வெறும் இந்த 3 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் ஐவூமி வழங்க இருக்கின்றது. இந்த வாகன மேம்படுத்தல் திட்டத்தைப் பெறுவது எப்படி என கேக்குறீங்களா, நீங்கள் ஐவூமி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வைத்திருப்பின் உங்களுக்கு அருகாமையில் உள்ள டீலரை அணுகலாம்.
அதேவேளையில், ஐவூமி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புதிதாக வாங்க போகின்றீர்கள் என்றால், மேலே பார்த்த அனைத்து இணைப்பு அம்சங்களும் ப்ரீ இன்ஸ்டால் (Pre-Installed)-ஆக வழங்கப்படும். அதாவது, ஏற்கனவே அனைத்து சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்ட வாகனங்களாகவே ஐவூமி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன.
ஜீட் எக்ஸ் இந்தியாவில் ரூ. 99,999 என்கிற விலையிலும், எஸ்1 ரூ. 84,999 என்கிற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஜீட் எக்ஸ் ஓர் முழு சார்ஜில் 110 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ ஆகும்.
மேலும், இதனால் வெறும் 3.5 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்ட முடியும். ஜீட் எக்ஸ் ரூ. 84,999 இல் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 120 கிமீ ரேஞ்ஜை வழங்கும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 55 கிமீ ஆகும்.
இதனை முழுமையாக சார்ஜ் செய்ய வெறும் 2 மணி நேரங்களே போதுமானது. ரிமூவபிள் பேட்டரி, பெரிய பூட் ஸ்பேஸ், கஸ்டமைஸ் செய்யும் வசதிக் கொண்ட சஸ்பென்ஷன், கம்ஃபோர்ட்டான இருக்கை உள்ளிட்டவற்றால் ஜீட் எக்ஸ் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய அம்சங்கள் தாங்கிய வாகனங்களை மேலும் சிறப்பானதாக மாற்றி இருக்கின்றது ஐவூமி நிறுவனம்.