கடக ராசிக்கு.. உடல் ஆரோக்கியம் மேம்படும்.. மன வருத்தம் மாறும்..!!
கடகம் ராசி அன்பர்களே,
இன்று கண்டிப்பாக நன்மைகள் நடைபெறும் நாள் என்று சொல்ல முடியும். எதார்த்தமாக எதிலும் ஈடுபடுவீர்கள்.
நண்பரின் ஆலோசனை நம்பிக்கை கொடுக்கும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். சகோதரர்களுடன் இருந்த மன வருத்தம் மாறும். கோபம் படபடப்பு குறையும். எதிர்பார்த்த செலவுகள் ஏற்படும். அவ்வப்போது மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் சரியாகும்.
வீண் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டாலும் கண்டிப்பாக சரியாகும். தேவையற்ற விஷயங்களில் ஈடுபடாதீர்கள். இறைவழிபாட்டில் மட்டும் நம்பிக்கை கொள்ளுங்கள். பரிகாரம் என்ற பெயரில் பணத்தை செலவு செய்ய வேண்டாம். இன்று பெண்களுக்கு கோபமான பேச்சு வெளிப்படும். குடும்பத்திற்காக உழைப்பீர்கள். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
இன்று மாணவர்கள் மிகவும் பொறுப்புடன் செயல்படுவீர்கள். உற்சாகமாக பணிகளை முடிப்பீர்கள். கல்வி மீது முழு அக்கறை இருக்கும். விளையாட்டு துறையில் சாதிக்க முடியும். உயர்கல்வியில் ஜெயிக்க முடியும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: மூன்று மற்றும் ஐந்து
அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்