மகரம் ராசிக்கு.. பண தேவைகள் பூர்த்தியாகும்.. பழைய பகைகள் மாறும்..!!
மகரம் ராசி அன்பர்களே,
இன்று உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். பேச்சில் மங்களத்தன்மை நிறைந்து காணப்படும்.
சிரித்த முகத்துடன் காரியங்களை சாதிப்பீர்கள். எதற்கும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர வேண்டாம். தொழில் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். வளர்ச்சி பாதையை நோக்கி வாழ்க்கை செல்லும்.
பண தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. எந்த சிக்கலையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எதிலும் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். பழைய பகைகள் மாறும். நேர்மையுடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து கொடுப்பீர்கள். இன்று பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும்.
முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். ஆழ்ந்த யோசனையுடன் காணப்படுவீர்கள். இன்று மாணவர்கள் விளையாட்டு துறையில் சாதிக்க முடியும். கலைத்துறையில் ஆர்வம் அதிகரிக்கும். ஏற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: ஆறு, ஏழு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்