கு ழந்தைகளின் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் எது?.. எந்தெந்தெந்த உணவுகளை கொடுக்கலாம்?.. விபரம் இதோ.!

குழந்தைகள், பெரியவர்கள் என யாராயினும் உடல் வளர்ச்சி, நலன் ஆகியவற்றுக்கு வைட்டமின்கள் என்பது கட்டாயம் தேவை ஆகும்.

வைட்டமின்கள் நிறைந்த உனவுகளை நாம் எடுத்துக்கொள்வதை பட்சத்தில், உடல் வளர்ச்சி என்பது பாதிக்கப்படும். நோய்களாலும் அவதிப்பட நேரிடும்.

வைட்டமின் போன்ற ஒவ்வொரு சத்துக்களும் குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாத விஷயமாகும். இதனால் குழந்தைகளுக்கு கட்டாயம் வழங்கவேண்டிய வைட்டமின் சார்ந்த உணவுகள் குறித்து காணலாம்.

கண்பார்வை சார்ந்த விஷயங்களுக்கும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் வழங்க வேண்டும். இது கருப்பையில் கரு வளர்ச்சிக்கும், பிறந்த குழந்தைக்கும் அத்தியாவசியமான வைட்டமின் ஆகும். எலும்பு, பற்கள் வளரவும் உதவுகிறது. முருங்கைக்கீரை, பச்சைக்காய்கறிகள், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் ஏ இருக்கிறது.

வயிறு மந்தம், அஜீரணம், இரத்த சோகை, பக்கவாதம், இதய பாதிப்பு உட்பட பிற பிரச்சனைகளில் இருந்து விலக வைட்டமின் பி அவசியமான ஒன்று ஆகும். கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறி ஆகியவற்றின் வாயிலாக வைட்டமின் பி சத்து நமக்கு கிடைக்கும்.

மன அழுத்தம், தோற்றத்தில் சிடுமூகம், எலும்புகள் பலம் குறைந்து காணப்படுதல், பற்கள் ஆட்டம், ஈறுகளில் இரத்தக்கசிவு, தோலில் இரத்தம் வெளியேறுதல் உட்பட பல விஷயங்களுக்கு வைட்டமின் சி சத்து அவசியம். வைட்டமின் சி மேற்கூறிய பல பிரச்சனைகளை நிவர்த்தி செய்யும். ஆரஞ்சு, திராட்சை, சமைக்காத காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி இருக்கிறது.

குழந்தைகளின் எலும்புகளுக்கு வலுவூட்ட வைட்டமின் டி உதவுகிறது. வைட்டமின் டி சத்து குறைந்தால் குழந்தைகளின் பற்கள் கெடும். கால்கள் வில்போல வளையும். வயிறு ஊதும். காலை நேர சூரிய ஒளி இயற்கை வைட்டமின் டி உற்பத்தி ஆகும். அதேபோல முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் டி இருக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *