TCS, இன்போசிஸ், விப்ரோ-க்கு மோசமான காலம்.. 3 நிறுவனத்திலும் ஒரே கதை.. தலை தப்புமா..?!!

ந்திய ஐடி துறைக்கு எப்போதும் இல்லாத மோசமான காலகட்டம் தற்போது வந்துள்ளது, லாபத்திலும், வருவாயிலும் எப்போதும் ஏறுமுகம் தான் என்று வலிமையான நிலையில் இருந்த ஐடி நிறுவனங்கள் கடந்த 2 காலாண்டுகளாக மந்தமான வருவாயும், லாபத்தில் சரிவும் எதிர்கொண்டு வருகிறது.இதைவிட முக்கியமாகப் புதிய வர்த்தகத்தைப் பெறுவதில் அதிகப்படியான சவால்கள் இருக்கும் காரணத்தால் ஊழியர்கள் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
இந்தியாவில் டாப் 5 ஐடி சேவை நிறுவனங்களிலும் எப்போதும் வருவாய், லாபம், வேலைவாய்ப்பு அளவுகள் ஏறுமுகத்திலேயே இருந்த காலம் போய் இப்போது மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. செப்டம்பர் காலாண்டைப் போலவே டிசம்பர் காலாண்டிலும் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ ஆகிய டாப் 4 ஐடி சேவை நிறுவனத்தில் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.டெக் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைப் போல் அதிகம் பணிநீக்க அறிவிப்புகளை அறிவிக்காவிட்டாலும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படாமல், பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்க்காமல் இருப்பதே பெரும் பிரச்சனை தான்.காரணம் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் 2 லட்சத்திற்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் ஒரு துறை ஐடி சேவை துறை. இந்தத் துறையில் ஏற்படும் பாதிப்பு நாட்டின் வர்த்தகம், பொருளாதாரத்தைக் கட்டாயம் பாதிக்கும். டீ கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரையில் இதன் எதிரொலி இருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.டிசிஎஸ்: இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாகத் திகழும் டிசிஎஸ் நிறுவனத்தில் செப்டம்பர் காலாண்டில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 608,985 ஆக இருந்த நிலையில் டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் 603,305 குறைந்துள்ளது. இதன் மூலம் 3 மாதத்தில் 5680 ஊழியர்கள் குறைந்துள்ளனர்.டிசிஎஸ் ஊழியர்கள் எண்ணிக்கை மீண்டும் சரிவு.. ஐடி ஊழியர்களே உஷார்..!! இன்போசிஸ்: இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தில் செப்டம்பர் காலாண்டில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,28,764 ஆக இருந்த நிலையில், அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர ஊழியர்கள் எண்ணிக்கை 3,22,663 ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம் 3 மாதத்தில் 6101 ஊழியர்கள் குறைந்துள்ளனர்.ஹெச்சிஎல்: சந்தை மதிப்பீட்டின் படி இந்தியாவின் 3வது பெரிய ஐடி சேவை நிறுவனமாக உருவெடுத்திருக்கும் ஹெச்சிஎல் நிறுவனம் கடந்த காலாண்டைப் போலவே இந்தக் காலாண்டும் ஊழியர்களைக் கூடுதலாகச் சேர்த்துள்ளது. செப்டம்பர் காலாண்டில் 3630 பிரஷ்ஷர் ஊழியர்களைக் கூடுதலாகச் சேர்த்த நிலையில், டிசம்பர் காலாண்டில் 3818 பிரஷ்ஷர் ஊழியர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் செப்டம்பர் மற்றும் டிசம்பர் காலாண்டில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,617 பேர் அதிகரித்து 2,24,756 ஆக உயர்ந்துள்ளது.இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல்-ல் பணியமர்த்தல் சரிவு ஏன் தெரியுமா.. இனி எப்படியிருக்கும்? விப்ரோ: வர்த்தகம், வருவாயில் தொடர் நஷ்டத்தை எதிர்கொண்டு வரும் விப்ரோ டிசம்பர் காலாண்டில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 4,473 பேர் குறைந்து 2,40,234 ஊழியர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் டாப் 4 ஐடி சேவை நிறுவனத்திலும் அட்ரிஷன் விகிதம் தொடர்ந்து குறைந்து 12 முதல் 14 சதவீதம் அளவில் மட்டுமே உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *