சென்னைக்குள் வருவோர் கவனத்திற்கு.. பொத்தேரி vs கிளாம்பாக்கம்.. யாருக்கு எது ஈஸியான ரூட்?
சென்னை: சென்னை வரும் மக்கள் கிளாம்பாக்கத்தில் தான் இனி இறங்க வேண்டும். அதேநேரம் ரயில் மூலம் செல்வோர் ஆம்னி பேருந்துகளிலோ அல்லது அரசு பேருந்துகளிலோ செல்வோர் பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி எளிதாக தாங்கள் வீட்டிற்கு போக முடியும்.
அதேநேரம் சில பகுதி மக்களுக்கு கிளாம்பாக்கமே ஈஸியான ரூட் ஆகும். அதனை பார்ப்போம்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் கடந்த டிசம்பர் 30ம் தேதி முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது. அரசு விரைவு பேருந்துகள் பொங்கல் பண்டிகையில் முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.
அதேநேரம் ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து வழக்கம் போல் இயங்கி வந்தன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்கள் இயக்க வேண்டும் என்றும், கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்கினால் கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்தது.
ஆனால் கிளாம்பாக்கத்தில் ஆம்னி பஸ்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை எனவும், தேவையான வசதிகளை ஏற்படுத்திய பின்னரே ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க அனுமதிக்க வேண்டும் எனவும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் திட்டமிட்டபடி ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும் என்று போக்குவரத்து கழகம் உத்தரவிட்டத.
இதையடுத்து நேற்று முதல் கோயம்பேட்டில் இயக்காமல் கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல, தென் மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆம்னி பஸ்கள், வண்டலூர் உயிரியல் பூங்காவில் தடுத்து நிறுத்தப்படுகிறது. அவர்களுக்கு கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு இனி செல்லக்கூடாது எனவும், கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு சென்று பயணிகளை இறக்கிவிட்டு அங்கேயே பஸ்களை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படியே நேற்று முதல் பேருந்துகள் கிளாம்பாக்கம் வரையே இயக்கப்படுகின்றன.
இந்த சூழலில் சென்னைக்கு வருவோர் எளிதாக சென்னை நகருக்கு போக என்ன வழிகள் இருக்கிறது என்பதை பார்ப்போம். பொதுவாக கிண்டி, குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், திநகர், மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, சேத்துப்பட்டு, எழும்பூர், சென்டர், சென்னை கோட்டை, கடற்கரை, தண்டையார்பேட்டை, திருவெற்றியூர், வில்லிவாக்கம், பாடி, பெரம்பூர், அம்பத்தூர், கொரட்டூர், ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களை ஓட்டியுள்ள பகுதிகளில் குடியிருக்கும், சென்னை பரனூரை தாண்டும் போதே டிரைவர்களிடம் அலார்ட் செய்து பெத்தேரியில் இறங்கிவிடுங்கள்.