சிவகார்த்திகேயன் படத்திற்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு

ஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன் நடிக்கும் அவரது 23வது படத்தின் படப்பிடிப்பு இரண்டு தினங்களுக்கு முன்பு ஆரம்பமானது.
இந்நிலையில் இப்படத்திற்கு வெளிமாநில அவுட்டோர் யூனிட்டை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்துவதற்கு தென்னிந்திய டிவி அவுட்டோர் யூனிட் உரிமையாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.வெளிமாநிலங்களில் நடக்கும் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகளில் தமிழக திரைப்படத் தொழிலாளர்கள் அதிக அளவில் பணியாற்ற முடியாது.
அந்தந்த மாநிலத் தொழிலாளர்களை வைத்துத்தான் படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என அந்த மாநில சங்கத்தினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள்.ஆனால், சென்னையில் நடைபெறும் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்புகளில் வெளிமாநில அவுட்டோர் யூனிட்டை கொண்டு வந்து படப்பிடிப்பு நடத்துவதால் இங்குள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.ஏஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பிற்கு ‘தாஹிர்’ எனும் வெளிமாநில அவுடோர் யூனிட்டை பயன்படுத்தி படப்பிடிப்பு நடத்தி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்குள்ள சங்கத்தினர் இன்று முதல் சினிமா, டிவி படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டோம் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை நேற்று எழுதியுள்ளார்கள்.
இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தற்காலிக முடிவு ஒன்று எட்டப்பட்டு வெளிமாநில அவுட்டோர் யூனிட்டுடன் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். ஆனால், இந்த விவகாரம் எப்போது வேண்டுமானாலும் சர்ச்சையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் தயாராகும் தமிழ்த் திரைப்படங்களிலும் தமிழ் தொழிலாளர்களுக்கு வாய்ப்பு தராமல் இருப்பதா என தொழிலாளர்கள் மத்தியில் எதிர்ப்புக் குரல் ஒலிக்க ஆரம்பித்துள்ளதாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *