“முதலமைச்சராக மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்ஜிஆர்” – பிரதமர் மோடி புகழாரம்

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் எம்ஜிஆர்-ன் திரைத்துறை மற்றும் அரசியலில் உள்ள பங்களிப்பை போற்றும் விதமாக தனது சமூக வலைதளப்பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி எம்.ஜி.ஆர்-க்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதில் மோடி, “எம்ஜிஆரின் பிறந்தநாளாகிய இன்று அவரை நாம் நினைவுகூற வேண்டும். தமிழ் சினிமாவின் அடையாளமாகவும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராகவும் திகழ்ந்தவர் அவர்; சமூகநீதி குறித்த எம்ஜிஆரின் படங்கள் சினிமாவையும் தாண்டி மக்களின் மனங்களை வென்றன; முதலமைச்சராக மக்கள் நலனுக்காக அயராது உழைத்தவர் எம்ஜிஆர். தமிழகத்தின் வளர்ச்சியில், மேம்பாட்டில் நீங்காத தடம் பதித்தவர். அவருடைய பணிகள் இன்றளவும் நம்மை ஊக்குவிக்கக் கூடியவை” என்றுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *