இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்… பயன்படுத்திக்கோங்க!
அதிர்ஷ்டத்திற்கு பின் தலை வழுக்கை என்பார்கள். அப்படி என்றால் என்ன பொருள்? அதிர்ட தேவதைக்கு பின்னால் தலைமுடி இல்லாமல் வழுக்கையாக இருக்கும்.
அதிர்ஷ்டத்தைப் பார்த்தவுடன் பிடித்துக் கொள்ள வேண்டும். வரும் அதிர்ஷ்டத்தைக் காத்திருந்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கொஞ்சம் தயங்கினால் கூட, அது கடந்து செல்லும் போது நம்மால் பிடிக்க முடியாது. அப்படி இந்த 6 ராசிகாரர்கள் தங்களது அதிர்ஷ்டத்தை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த புது வருஷம் கல்வி, வேலை, திருமணம், குழந்தை, செல்வம், சுகபோக வாழ்க்கை, சங்கடங்களில் இருந்து நிவர்த்தி என ஒவ்வொருவரின் தேவையும் மாறுபடுகிறது. மேல்படிப்பு, பணி இவைகளுக்காக வெளிநாடு செல்வதும் பலரது விருப்பம். 12 ராசிக்காரர்களில் பிறக்கப்போகும் புத்தாண்டில் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் நினைத்ததை சாதிக்கப் போகிறார்கள். இதில் கில்லியாக சொல்லி அடிக்கப்போகும் ராசி யார் என பார்க்கலாம்.
துலாம்:
சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் கொண்டாட்டம் தான். இந்த புத்தாண்டில் குருபகவான் சுப பலன்களை வாரி வழங்க தயாராக இருக்கிறார். தொட்டதெல்லாம் பொன்னாகும். எடுத்த காரியத்தில் வெற்றி நிச்சயம். பணியில் பதவி உயர்வு, பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். மந்தநிலை மறைந்து நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே இந்த 2024ம் ஆண்டு முழுக்கவே பொற்காலம் தான். தொழிலில் தாறுமாறான லாபம் கிட்டும். பணம் பல வழிகளில் வந்து சேரும். கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். எதிர்பார்த்த ஆதாயம் கிட்டும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். இழுபறியில் இருந்த பல விஷயங்கள் சுபபலன்களை அள்ளித் தரும். உற்சாகம் பெருகும்.