எலக்ட்ரிக் கார் வாங்கியவர்களுக்கும், வாங்கப்போகிறவர்களுக்கும் ஷாக் செய்தி..!!
மறுபுறம் புதிதாக ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.இதற்கான ஆரம்பப் புள்ளி எலான் மஸ்க், டெஸ்லா நிறுவனம் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பிரச்சனையைச் சந்தித்து வருவது போல்.. சீனா எலக்ட்ரிக் கார் விற்பனையில் அந்நாட்டின் BYD முதல் இடத்தைத் தட்டிச்சென்றது. இதில் கடுப்பான எலான் மஸ்க் சீனாவில் எலக்ட்ரிக் கார் விலையை டக்கெனக் குறைத்துள்ளார். சீனாவில் அதிகம் விற்பனையாகும் மாடல் 3 செடான் கார் விலையை டெஸ்லா 5.9 சதவீதம் குறைப்பதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் இக்காரின் விலை சீனாவில் 2,45,900 யுவான் அதாவது 34,300 டாலருக்கு குறைந்துள்ளது.எலான் மஸ்க் 2016 ஆம் ஆண்டில் இருந்து 35000 டாலருக்கு குறைவான விலையில் கார்களை விற்பனைக்குக் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்து வந்த நிலையில் இது, 2024 ஆம் ஆண்டு நினைவாகியுள்ளது. காரின் விலை குறைவதில் நல்ல செய்தியும் உள்ளது, கெட்ட செய்தியும் உள்ளது.பொதுவாகக் கார்களின் விலை பணவீக்கத்தின் அடிப்படையிலும், உற்பத்தி செலவுகள் அடிப்படையிலும் அதிகரிக்கும். 2024ல் கூட இந்தியாவில் பல கார்களின் விலை அதிகரித்தது நினைவிருக்கும். ஆனால் விலை குறைவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.இந்த நிலையில் கார்களின் விலை குறைவது மூலம் புதிதாகக் கார் வாங்குபவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும், ஆனால் ஏற்கனவே அதிக விலை கொடுத்துக் கார் வாங்கியவர்களுக்கு அவர்களின் ரீசேல் வேல்யூ இதன் மூலம் பெரிய அளவில் பாதிக்கப்படும்.டெஸ்லா சீனாவில் மாடல் 3 கார் விலையைக் குறைத்த உடனேயே அமெரிக்காவின் முன்னணி டாக்சி சேவை நிறுவனமான Hertz தனது டெஸ்லா கார் இருப்பில் 3ல் ஒரு பகுதியை விற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.இதேபோல் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் விலை குறைய அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
இதற்கு முக்கியமான காரணம் எலக்ட்ரிக் வானகங்களுக்கான பேட்டரி விலை கடந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்தது தான்.ப்ளூம்பெர்க் NEF வருடாந்திர லித்தியம்-அயன் பேட்டரி விலை குறித்த கணக்கெடுப்பின் படி எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தும் லித்தியம் பேட்டரி பேக் விலை இந்த ஆண்டு ஒரு கிலோவாட்-க்கு 139 டாலராகக் குறைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் இதன் விலை 161 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடந்த வருடத்தைக் காட்டிலும் லித்தியம் பேட்டரி பேக் விலை சுமார் 14% சரிந்துள்ளது.
லித்தியம் உலோகம் மிகவும் அரிதான உலோகமாக இருந்தது, இதனால் சந்தையில் டிமாண்ட் சப்ளை பிரச்சனை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் கடந்த 4 வருடத்தில் உலகில் பல நாடுகள் லித்தியம் கனிமம் கண்டுபிடிக்கப்பட்டு உற்பத்தியைப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.இதேபோல் சீனாவின் பேட்டரி உற்பத்தி மட்டுமே சர்வதேச அளவிலான மொத்த தேவையைத் தாண்டியது, இதனால் உலகளவில் லித்தியம் பேட்டரி ஓவர்சப்ளை அளவீட்டை தொட்டு விலை குறைந்துள்ளது. இதனால் தொடர்ந்து தான் எலக்ட்ரிக் வாகனங்களின் விலை குறையத் துவங்கியுள்ளது. இதன் முதல் விக்கெட் டெஸ்லா.