வெளிநாட்டு முதலீட்டாளர்கள் போட்டி போட்டு வாங்கும் Penny Stock.. 3 வருடத்தில் 4128% லாபம் – Servotech Power
பங்குச் சந்தையில் தற்போது எலக்ட்ரிக் வாகன துறையை சேர்ந்த பங்குகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. எதிர்காலத்தில் சாலைகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் வளம் வரும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக எலக்ட்ரிக் வாகன மற்றும் அது சார்ந்த துறையை சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை ஏற்றம் கண்டு வருகிறது.இந்த சூழ்நிலையில், மல்டிபேக்கர் EV பென்னி பங்கு ஒன்று அண்மையில் தொடர்ந்து அப்பர் சர்க்கியூட் அடித்துள்ளது.
அந்த பங்கு சர்வோடெக் பவர் சிஸ்டம்ஸ் லிமிடெட்.
1998ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் எல்இடி லைட்டிங் தீர்வுகள், யுபிஎஸ் சிஸ்டம்கள், இன்வெர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகளை உற்பத்தி செய்கிறது. சர்வோடெக் பவர் சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக உள்ளது.
நடப்பு 2023-24ம் நிதியாண்டின் 2வது காலாண்டு (2023 செப்டம்பர் காலாண்டு) மற்றும் அரையாண்டில் (2023 ஏப்ரல்-செப்டம்பர்) இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் முறையே ரூ.85.93 கோடி மற்றும் ரூ.165.5 கோடியாக உள்ளது.இது சென்ற நிதியாண்டின் இதே காலத்தை காட்டிலும் முறையே 114 மற்றும் 133 சதவீதம் அதிகமாகும்.
இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 538 சதவீதம் உயர்ந்து ரூ.7.23 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 301 சதவீதம் அதிகரித்து ரூ.3.12 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்நிறுவனம் அண்மையில் பிபிசிஎல் நிறுவனத்தின் தேசியநெட்வொர்க்கில் 2,649 ஏசி இவி சார்ஜர்ஸ் அமைப்பதற்கான வர்த்தக ஒப்பந்தத்தை பெற்றது. இது இந்நிறுவனத்துக்கு பெரிய வர்த்தக வாய்ப்பாக கருதப்படுகிறது.அண்மையில், இந்நிறுவனத்தின் புரோமோட்டர் ராமன் பாட்டியா மற்றும் சில வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் மகேஷ் வாஸ், நிகில் பத்ரா உள்ளிட்ட புரோமோட்டர் அல்லாதவர்கள் ஒரு முன்னுரிமை வெளியீட்டின் மூலம் மொத்தம் 89 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளனர்.இதில் ராமன் பாட்டியா மட்டும் 5 லட்சம் பங்குகளை வாங்கி இருந்தார்.
நிறுவனத்தின் புரோமோட்டர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்னுரிமை அடிப்படையில் பங்குகளை வாங்கிய தகவல் வெளியானதையடுத்து அந்நிறுவன பங்கின் விலை தொடர்ந்து அப்பர்சர்க்கியூட் அடித்தது.தற்போது இப்பங்கின் விலை அதன் 52 வார உயர்வான ரூ.100ஐ காட்டிலும் சுமார் 19 சதவீதம் குறைவாக உள்ளது.