முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா கைது..!

ஐதராபாத்தில் உள்ள கவிதாவின் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதன் முடிவில் ஆந்திர மேலவை உறுப்பினரான கவிதா கைதாகியுள்ளார்.

இதையடுத்து அவர் விசாரணைக்காக டெல்லி அழைத்துச் செல்லப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது நடவடிக்கையை கண்டித்து தெலுங்கானாவில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில், கவிதா கைது செய்யப்பட்டு இருப்பது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக டெல்லி அரசின் 2021-22ம் ஆண்டுக்கான கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக கவிதாவிடம் ஏற்கனவே சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *