காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்திக்கு சொந்தமாக கார் இல்லை..!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சோனியா காந்திமாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவர் தனது சொத்துகள் குறித்த விவரத்தை பிரமாணப் பத்திரமாக சமர்ப்பித்துள்ளார்.பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.12.35 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் தனது பெயரில் சொந்தமாக கார் உள்ளிட்ட வாகனங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது சொத்து மதிப்பு ரூ.72 லட்சம் வரை அதிகரித்துள்ளது.மேலும் தனக்கு இத்தாலி நாட்டில் தனது தந்தை வழிமூலமாக ரூ.26 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“1,267 கிராம் எடையிலான தங்க நகைகள், 88 கிலோ வெள்ளிப் பொருட்கள், டெல்லியின் தேரா மந்தி பகுதியில் 2,529 சதுர மீட்டர் பரப்பளவில் வேளாண் நிலம் (ரூ.5,88 கோடி மதிப்பு) உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

வங்கி முதலீடுகள் மூலம் வட்டி, ராயல்டி வருவாய், மக்களவை உறுப்பினர் என்ற முறையில் சம்பளம், மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் கிடைக்கும் டிவிடெண்ட் வருவாய் என பலவகைகளில் தனக்கு வருவாய் வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பெங்குயின் புக் இந்தியா, ஆக்ஸ்பர்ட் யுனிவர்சிட்டி பிரஸ், ஆனந்தா பப்ளிஷர்ஸ், கான்டினென்டல் பப்ளிகேஷன்ஸ் மூலம் ரூ.1.69 லட்சம் ராயல்டி தொகை கிடைக்கிறது. 1964ல் இத்தாலியின் சியானாவில் உள்ள இஸ்டிடுடோ சாண்டா தெரசாவில் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மூன்றாண்டு படிப்பை முடித்துள்ளதாகவும் 1965ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜில் உள்ள லெனாக்ஸ் குக் பள்ளியில் ஆங்கிலத்தில் ஒரு படிப்பை முடித்துள்ளதாகவும் பிரமாணப் பத்திரத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *