உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்சுக்கும் முதலிடம்: இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?

2024ஆம் ஆண்டுக்கான, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நாடுகளில் பிரான்சும் இடம்பெற்றுள்ளது.

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல்
Henley Passport Index என்னும் அமைப்பு, உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டுவருகிறது.

ஒரு நாட்டின் பாஸ்போர்ட் மூலம் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்பதன் அடிப்படையில் இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.

அவ்வகையில், ஆறு நாடுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளன. அவற்றில் பிரான்சும் ஒன்று. முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ள மற்ற நாடுகள், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளாகும்.

இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் 194 நாடுகளுக்குப் பயணிக்கலாம், அல்லது அந்த நாடுகளுக்குப் பயணித்து, (சில நாடுகளைப் பொருத்தவரை) அங்கு சென்று இறங்கியதும் விசா பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
இந்த பட்டியலில், இந்தியா 80ஆவது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

முந்தைய ஆண்டு இந்திய பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி 60 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்ற நிலையிலிருந்து, தற்போது 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம் என்ற நிலைக்கு முன்னேறியுள்ளது இந்தியா.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *