கருக்கலைப்பை அங்கீகரித்து பிரான்ஸ்
கருக்கலைப்பு தொடர்பான சட்ட மூலத்தை பிரான்ஸ் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.
இந்நிலையில் கருக்கலைப்பு பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமை என பிரான்ஸ் நாடாளுமன்றில் கூறப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கருக்கலைப்பு செய்ய பிரான்ஸ் பெண்கள் சட்டப்பூர்வ அனுமதி பெறத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது.
கருக்கலைப்பு அரசியலமைப்பு உரிமை
பெரும்பாலான நாடுகள் கருக்கலைப்பிற்கு எதிராக இருந்து வரும் நிலையில், கருக்கலைப்பு பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமை என அறிவித்த முதல் நாடு என்ற பெயரை பிரான்ஸ் பெற்றுள்ளது.
குறித்த சட்டமூலமானது அந்நாட்டு நாடாளுமன்றில் வாக்கெடுப்புக்கு உள்வாங்கப்பட்டபோது ஆதரவாக 780 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகியுள்ளன. ஐந்தில் மூன்று பங்கு வாக்குகள் சட்டத்தை நிறைவேற தேவை என்ற நிலையில் அமோக பெரும்பான்மையுடன் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் வெளியிட்டுள்ள செய்தியில்
“நாங்கள் அனைத்து பெண்களுக்கும் ஒரு செய்தியை சொல்கிறோம். உங்களுடைய உடல் உங்களுக்கானதாக நம்பப்படுகிறது.
உங்களுக்காக யாரும் முடிவு செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.