பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிகள்: தாய்ப்பாலூட்டும் வீராங்கனைகளுக்காக சிறப்பு ஏற்பாடு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், 2024ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது அனைவரும் அறிந்ததே. அந்த விளையாட்டுப் போட்டிகளை திறம்பட நடத்தி முடிப்பதென பிரான்ஸ் அரசாங்கம் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளைத் துவங்கியுள்ளது.
தாய்ப்பாலூட்டும் வீராங்கனைகளுக்காக சிறப்பு ஏற்பாடு
இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும், தாய்ப்பாலூட்டும் விளையாட்டு வீராங்கனைகளுக்காக சிறப்பு ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. பிரபல பிரெஞ்சு ஜூடோ நட்சத்திர வீராங்கனையான Clarisse Agbegnenou முதலானோர், விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும், சமீபத்தில் தாயான விளையாட்டு வீராங்கனைகளுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.
அதைத் தொடர்ந்து, தாய்ப்பாலூட்டும் பிரான்ஸ் நாட்டு விளையாட்டு வீராங்கனைகளுக்காக, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடத்திற்கு சற்று தொலைவில் உள்ள ஹொட்டல்களில் அறைகள் ஒதுக்கப்பட உள்ளன. அந்த அறைகளில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் தங்குவதுடன், அவர்கள் விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் நேரத்தில், பிள்ளைகளுடைய தந்தைகள் அந்த அறைகளில் தங்கி பிள்ளைகளை கவனித்துக்கொள்ளலாம் என பிரான்ஸ் ஒலிம்பிக் கமிட்டியின் செக்ரட்டரி ஜெனரலான Astrid Guyart தெரிவித்துள்ளார்.