கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இலவச கல்வி… அட்மிஷன் கட்டணம் ரூ.25 மட்டும்தான்..!
மத்திய அரசின் கல்வித்துறையில் கீழ் தனித்து இயங்கும் பள்ளியான கேந்திரிய வித்யாலயா, இந்தியாவில் தலைசிறந்த பள்ளிகளில் ஒன்றாக இருக்கிறது. இந்தாண்டுகான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இப்பள்ளியில் மாணவர்களுக்கான கட்டணம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். 1 முதல் 12 வகுப்பு வரை மாணவிகளுக்கு டியூசன் கட்டணம் கிடையாது.
அதே போல், SC/ST மாணவர்கள், கேவிஎஸ் பள்ளி ஊழியர்களில் குழந்தைகள், ராணுவ வீரர்களில் குழந்தைகள், வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களில் குழந்தைகள், ஊனமுற்ற மாணவர்கள் ஆகியவற்றவற்களுக்கு டியூசன் கட்டணம் கிடையாது.
பெற்றோர்களுக்கு ஒரே பெண் குழந்தையாக இருக்கும் மாணவிகளுக்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. இப்பள்ளியில் அனைத்து மாணவர்களுக்கும் அட்மிஷன் கட்டணமாக ரூ.25 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
9 முதல் 10 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ரூ.200 டியூசன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் வணிகம் மற்றும் மனிதநேயம் பிரிவிற்கு ரூ.300 மற்றும் அறிவியல் பிரிவிற்கு ரூ.400 வசூலிக்கப்படுகிறது.
இவைதவிர மூன்றாம் வகுப்புகளில் இருந்து ரூ.100 கணினி நிதி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.150 கணினி அறிவியல் கட்டணம் மற்றும் ஒவ்வொரு மாதமும் ரூ.500 வித்யாலயாவிகாஸ்நிதி ஆகியவை பள்ளியின் கட்டணங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.