கூகுள் தரும் இலவச வாய்ப்பு.. இனி யார் வேண்டுமானாலும் AI துறையில் பணியாற்றலாம்.. செம சான்ஸ்..!
கூகுள், AI இனிஷியேட்டிவ் சீரிஸில் ஒரு லாங்குவேஜ் மாடலை உருவாக்கியுள்ளது. இதை கூகுள் சூட் உட்பட தனது ஒவ்வொரு தயாரிப்புகளிலும் ஒருங்கிணைத்து வருகிறது. இந்த நிலையில் கூகுள் இப்போது மக்கள் அனைவரும், ஏஐ துறையில் பயிற்சி பெற வேண்டும் என்பதற்காக பல இலவச ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் ஆன்லைன் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தப் புதிய படிப்புகள், மக்கள் கற்கவும், அவர்களின் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் அதிக வேலை வாய்ப்புகளுக்குத் தயாராகவும் உதவுகின்றன. இப்படி கூகுள் உருவாக்கியுள்ள இலவச படிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இன்ட்ரடக்ஷன் டு லார்ஸ் லாங்குவேஜ் மாடல்ஸ்: இந்த கோர்ஸில் லார்ஸ் லாங்குவேஜ் மாடல்கள், அவற்றின் பயன்கள், ப்ராம்ப்ட் டியூனிங் ஆகியவறை இடம்பெற்றுள்ளன.
இன்ட்ரடக்ஷன் டு ரெஸ்பான்ஸிபிள் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ்:
இந்த கோர்ஸில் மாணவர்கள் ரெஸ்பான்ஸிபிள் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸை புரிந்து கொள்ளுதல், அதன் முக்கியத்துவம், கூகுள் அதை தனது தயாரிப்புகளில் எப்படி செயல்படுத்துகிறது போன்ற பாடங்கள், உள்ளன.
ஜெனரேட்டிவ் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் ஃபண்டமென்டல்ஸ்:
இந்த கோர்ஸ் ஜெனரேட்டிவ் ஏஐ பற்றிய அனைத்து அறிமுகத்தையும் தருகிறது. அத்துடன் லார்ஜ் லாங்குவேஜ் மாடல்கள் ரெஸ்பான்ஸிபிள் ஏஐ பற்றிய விவரங்களையும் கற்றுத் தருகிறது.
இன்ட்ரடக்ஷன் டு இமேஜ் ஜெனரேஷன்: இந்த கோர்ஸ் இமேஜ் ஜெனரேஷன் பற்றிய தியரி, டிரெய்னிங், டிப்ளாய்மென்ட் ஆப் பாப்புலர் வெர்ட்டெக்ஸ் ஏஐ பற்றிய பாடத்தைக் கொண்டுள்ளது.
என்கோடர்- டீகோடர் ஆர்க்கிடெக்சர்: இதில் நீங்கள் மெஷின் லேர்னிங் ஆர்க்கிடெக்சர், அதன் கேள்வி பதில், சுருக்கம் மற்றும் மொழிபெயர்ப்பு போன்ற வரிசைகளை உள்ளடக்கிய பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் இயந்திர கற்றல் கட்டமைப்பு பற்றி சொல்லித் தரப்படுகிறது.
அட்டென்ஷன் மெக்கானிசம்: இந்த கோர்ஸில் இன்புட் சீக்குவன்சுக்குத் தேவையான நியூட்ரல் நெட்வொர்க்கை பயன்படுத்தும் டெக்னிக்கை கூகுள் கற்றுத் தருகிறது.
கிரியேட் இமேஜ் கேப்ஷனிங் மாடல்ஸ்: இந்தப் புதிய கோர்ஸில் இமேஜ் கேப்ஷனிங் மாடல்ஸ் மற்றும் என்கோடர்- டீகோடர் ஆர்க்கிடெக்சர் பற்றி கற்றுத் தரப்படுகிறது.
இன்ட்ரடக்ஷன் டு ஜெனரேட்டிவ் ஏஐ ஸ்டூடியோ: இந்த கோர்ஸில் ஜெனரேட்டிவ் ஏஐ ஸ்டூடியோ பற்றிய அடிப்படைகள் கற்றுத் தரப்படும். இதன் மூலம் நீங்கள் உங்களது அப்ளிகேஷன்களுக்கு புரோட்டோடைப் மற்றும் ஜெனரேட்டிவ் ஏஐ மாடல்களை உருவாக்குவதற்கு பயிற்சி அளிக்கப்படும்.