மலைப் பிரதேசங்களிலும் இனி இலவச பயணம்.. குஷியில் மகளிர்கள்!
மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் செய்யும் திட்டம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
உதகையில் இன்று தொடங்கும் இத்திட்டம் படிப்படியாக மற்ற மலைக்கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
2024-25ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் மலைப்பாங்கான பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் கட்டணம் இன்றி பெண்கள் பயணிக்க அனுமதிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், உள்ளூர் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதன்படி, ஆட்சிக்கு வந்த பின், முதல் கையெழுத்தாக, ‘பெண்களுக்கு இலவச பேருந்து வசதி’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினர். இந்த திட்டம் கோடிக்கணக்கான பெண்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
இதன் அடையாளமாக, இந்த திட்டம் “மகளிர் இலவச பேருந்து” என்று பெயரிடப்பட்டது, பின்னர் “விடியல் திட்டம்” என மறுபெயரிடப்பட்டது.