அடிக்கடி முதுகுவலியால் அவதியா? ‘இவை’ காரணங்களாக இருக்கலாம்..
Back Pain Reasons In Tamil: உலகளவில் பலர் முதுகுவலியால் அவதிப்படுவதாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.
இந்த வலிகள் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தசைப்பிடிப்பு, அடிப்பட்ட காரணம் என இதற்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இடுப்பின் கீழ் பகுதியை தீர்ப்பதற்கு பல வழிகள் உள்ளன. ரெஸ்ட் எடுப்பது, சூடாக அல்லது குளிர்ச்சியாக எதையேனும் வைத்து ஒத்தடம் கொடுப்பது ஆகியவை அந்த வழிமுறைகளில் ஒன்றாகும். இதற்காக சில உடற்பயிற்சிகளும், சிகிச்சை முறைகளும் கூட உள்ளன. ஒரு சில நிலைகளுக்கு அறுவை சிகிச்சைகளும் உள்ளன. இது போன்ற முதுகு வலிகள் ஏற்படுவதற்கான காரணங்களையும், அவற்றை தீர்க்க என்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பதையும் இங்கு பார்ப்போம்.
இடுப்பு வலி குறித்து பேசும் மருத்துவர்கள், இது போன்ற வலிகள் மிகவும் சாதாரணமானவை என்றும் பலருக்கு, அவர்களின் வாழ்வில் பல்வேறு கட்டங்களில் இந்த வலி ஏற்படலாம் என்றும் கூறுகின்றனர்.