ஹாலிவுட் படத்திலிருந்து விலகிய சமந்தா.. இணைந்த ஸ்ருதிஹாசன்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தசை அழற்சி நோயால் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் சிறிது காலம் நடிப்பில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார்.
இதற்கிடையில் 2021-ல் ஹாலிவுட் இயக்குனர் பிலிப் ஜான் இயக்கும் ‘சென்னை ஸ்டோரி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.
இதையும் அவர் அறிவித்தார்.டிமேரி என் முராரியின் காதல் நகைச்சுவை நாவலான ‘அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவிருந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து சமந்தா விலகியுள்ளார்.அவருக்கு பதிலாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார்.அவருடன் விவேக் கல்ராவும் நடிக்கிறார்.
ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழில் சப்டைட்டில் இருக்கும்.அனு என்ற தனியார் துப்பறியும் பெண்ணாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.