Bajaj முதல் Honda வரை! சிறந்த Mileage தரும் TOP 5 பைக் மாடல்கள் என்னென்ன?
குறைவான விலையில் ஸ்டைலாகவும், சிறந்த Mileage தரும் டாப் 5 பைக் மாடல்களின் விவரத்தை பற்றி பார்க்கலாம்.
Two wheeler bikes என்றாலே நாம் 125 cc engine கொண்ட பைக்கை தான் அதிகம் விரும்புகிறோம். ஏனென்றால், இந்த மாடல் பைக்குகள் விலை குறைவாகவும், சிறந்த Mileage தரும் என்பதால் இதனை தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படிப்பட்ட 5 பைக்குகளின் விவரத்தை பார்க்கலாம்.
பஜாஜ் CT125X (Bajaj CT125X)
Bajaj CT125X பைக்கின் ஆரம்ப விலையானது ரூ.74,016 மற்றும் ரூ.77,216 (Ex-showroom) விலையில் கிடைக்கிறது. இது Disc brake மாடல் பைக் என்பதால் விலை கொஞ்சம் அதிகம்.
ஒரு சிலிண்டர் 124.4cc இன்ஜினைக் கொண்ட Bajaj CT125X பைக்கானது 10.7bhp ஆற்றலையும் 11Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்கும். மேலும், இந்த எஞ்சினுடன் 5 வேக Gearbox இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பைக்கின் Mileage லிட்டருக்கு 61.3 kilometer கொடுக்கும்.
ஹோண்டா ஷைன் 125 (Honda Shine 125)
Honda Shine 125 பைக்கானது 2 மாடல்களில் மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது. முதலாவது, Drum brake மாடல் பைக்கின் ஆரம்ப விலை ரூ.79,800 ஆகும். அடுத்து, Disc brake மாடல் பைக்கின் விலை ரூ.83,800 ஆகும்.
இந்த பைக்கானது 23.94cc single cylinder engine மூலம் இயக்கப்படுகிறது. குறிப்பாக,10.59 Php பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. மேலும், ஐந்து வேக Gearbox எஞ்சினுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் (Hero Super Splendor)
Hero Super Splendor பைக்கானது ரூ.80,848 மற்றும் ரூ.84,748 என இரு விலைகளில் கிடைக்கிறது. இதில் Disc brake மாடல் பைக்கிற்கு விலை அதிகம். Single cylinder 124.7cc எஞ்சின் கொண்ட பைக்கானது, 0.72bhp ஆற்றலையும், 10.6Nm உச்ச முறுக்குவிசையையும் வெளிப்படுத்துகிறது.
ஹோண்டா SP125 (Honda SP125)
Honda SP125 பைக்கானது ரூ.86,017, ரூ.90,017 மற்றும் Sports Edition ரூ.90,567 என்ற மூன்று விலைகளில் கிடைக்கிறது. 124cc எஞ்சின் கொண்ட இந்த பைக்கானது 10.72 bhp ஆற்றலையும், 10.9 Nm உச்ச முறுக்குவிசையையும் உருவாக்குகிறது.
பஜாஜ் பல்சர் 125 (Bajaj Pulsar 125)
Bajaj Pulsar 125 பைக்கானது ரூ.80,416 -ல் தொடங்கி ரூ.94,138 விலையில் வாங்க கிடைக்கிறது. 125cc எஞ்சின் கொண்ட இந்த பைக்கானது 11.64 bhp ஆற்றலையும், 10 என்எம் பீக் டார்க்கையும் உருவாக்குகிறது.