GST முதல் FASTag வரை.. மார்ச் மாதம் முதல் 6 முக்கிய மாற்றங்கள்

இந்த நிதியாண்டின் கடைசி மாதம் பிறந்துள்ள நிலையில், மார்ச் ஒன்றாம் தேதி அதாவது இன்று முதல் பல புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பிடத்தகுந்த மாற்றங்களோடு வந்துள்ள இந்தப் புதிய விதிகள் பெரும்பாலும் அனைத்து பயனாளர்களிடத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என உறுதியாக கூறலாம். பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, எஸ்பிஐ கிரெடிட் கார்டு ஃபாஸ்ட்டேக் கேஒய்சி, சிஎன்ஜி மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலை தொடர்பான சில முக்கியமான மாற்றங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

ஜிஎஸ்டி விதிகளில் மாற்றம் :

புதிய ஜிஎஸ்டி வழிகாட்டுதல் நடைமுறையில் உள்ளதால், இனி ரூ.5 கோடிக்கு மேல் வருடாந்திர வருமானம் ஈட்டும் எந்தவொரு தொழிலும் தங்களது அனைத்து B2B பரிவர்த்தனையின் மின்னனு விலைப்பட்டியலை சேர்க்காமல் இணையப் பதிவு ரசீதை (இ-வே பில்) உருவாக்க முடியாது.

ஃபாஸ்ட்டேக் கேஒய்சி :

மார்ச் மாத இறுதி வரை ஃபாஸ்ட் டேக் பயனாளர்கள் தங்களது கேஒய்சி-யை அப்டேட் செய்து கொள்ளலாம் என இதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது தேசிய நெடுஞ்சாலை ஒழுங்குமுறை ஆணையம் (NHAI). ஃபாஸ்ட் டேக் பயனாளர்கள் அனைவரும் கட்டாயம் தங்களது கேஒய்சி-யை புதுப்பிக்க வேண்டுமென ஏற்கனவே NHAI அறுவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இதை புதுப்பிக்காவிட்டால் ஃபாஸ்ட் டேக் கணக்கில் உள்ள தகவல்கள் அனைத்தும் தவறானவை என வங்கிகள் கருதக்கூடும்.

எஸ்பிஐ கிரெடிட் கார்டு :

வருகிற மார்ச் 15-ம் தேதி முதல், எஸ்பிஐ வங்கி தங்களது கிரெடிட் கார்டிற்கான பில் கணக்கிடும் நடைமுறையின் குறைந்தபட்ச தேதியை மாற்றவுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்து ஏற்கனவே தங்களது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் மூலம் எஸ்பிஐ வங்கி அறிவுறுத்தியுள்ளது.

பேடிஎம் பேமெட்ண்ட்ஸ் வங்கி :

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் சேவைகளை தடைவிதிப்பதற்கான காலக்கெடுவை 2024-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி வரை நீட்டித்துள்ளது மத்திய ரிசர்வ் வங்கி. அதற்குள்ளாக பேடிஎம் வாடிக்கையாளர்களும் வியாபாரிகளும் தங்களது கணக்குகளே வேறு வங்கிகளுக்கு மாறிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேடிஎம் வங்கி தனது சேவைகள் அனைத்தையும் பிப்ரவரி 29-ம் தேதி முதல் நிறுத்த வேண்டும் என ஏற்கனவே ரிசர்வ வங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் :

மார்ச் 8, மகா சிவராத்திரியை, மார்ச் 25 ,ஹோலி பண்டிகை மற்றும் மார்ச் 29, புனித வெள்ளியை என இந்த மாதத்தில் மட்டும் 14 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

எல்பிஜி, சிஎன்ஜி, பிஎன்ஜி விலை :

எல்பிஜி சிலிண்டர், சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகள் ஒவ்வொரு மாதமும் ஏற்ற இறக்கங்களை சந்திக்க கூடியவை. வழக்கமாக ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் இதன் விலைகள் மாற்றம் செய்யப்படும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *