தலைவலி முதல் கால் வலி வரை; அனைத்திற்கும் இந்த ஒரு கீரை: சுவையாக சட்னி செய்து சாப்பிடுங்க

முடக்கத்தான் கீரையில் அத்தனை ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. தலைவலி முதல் கால் வலி வரை அனைத்திற்கும் இந்த கீரை சிறந்ததாக இருக்கும். குறிப்பாக கால் மூட்டு வலிக்கு முடக்கத்தான் கீரை சிறந்தது. முடக்கத்தான் கீரையை ஏதோ ஒரு வகையில் உங்கள் உணவில் சேர்த்து வரலாம். தோசை, சட்னி, குழம்பு செய்தும் சாப்பிடலாம். தலைவலி இருக்கும் போது இந்த கீரையை வெந்நீரில் போட்டு ஆவி பிடிக்க தலைவலி சரியாகும். இந்த முடக்கத்தான் கீரையில் சட்னி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முடக்கத்தான் கீரை – 1/4 கப்

துருவிய தேங்காய் – 1/2 கப்

வரமிளகாய் – 3

பூண்டு – 2-3 பல்

நல்லெண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

புளி – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், குறைவான தீயில் வைத்து முடக்கத்தான் கீரையை வதக்கவும். பின் வதக்கிய முடக்கத்தான் கீரையை தனியாக எடுத்து வைக்கவும்.

பின்பு அதே கடாயை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் துருவிய தேங்காய், புளி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கி இறக்கி, அதையும் ஆற வைக்க வேண்டும். பிறகு வதக்கிய பொருட்கள் அனைத்தையும் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு புளி, சுவைக்கேற்ப உப்பு மற்றும்

நீரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக ஒரு  அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான முடக்கத்தான் கீரை சட்னி தயார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *