சம்பளம் அதிகம் என்பதால் கணவரின் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நயன்தாரா
சென்னை: சம்பளம் அதிகம் என்பதால் கணவரின் படத்தில் இருந்தே நயன்தாராவை நீக்கி உள்ளனராம்.
நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருக்கிறார்.
இவர் நடிப்பில் கடைசியாக அன்னபூரணி திரைப்படம் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. சில சர்ச்சையும் இப்படத்தின் மீது தற்போது எழுந்துள்ளது. அடுத்ததாக டெஸ்ட், மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
நயன்தாராவின் கணவரும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவன் அடுத்ததாக LIC எனும் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த தலைப்பை பயன்படுத்த அனுமதி இல்லை என LIC நிறுவனம் அறிக்கை கொடுத்துள்ளது. ஆகையால் இந்த தலைப்பு மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட முதன்மை கதாபாத்திரங்கள் நடிக்கிறார்கள். லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் தான் போடப்பட்டது. மேலும் இப்படத்தில் நயன்தாரா ஹீரோ பிரதீப் ரங்கநாதனின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என தகவல் வெளிவந்தது.
ஆனால் தற்போது இப்படத்தில் இருந்து நயன்தாரா விலகி விட்டாராம். நயன்தாராவின் சம்பளம் ரூ. 12 கோடியாக உயர்ந்துவிட்டது என கூறப்படுகிறது. இப்படத்தின் பட்ஜெட்டுக்கு நயன்தாராவின் சம்பளம் தாங்காது என தயாரிப்பாளர் கூறியதன் காரணமாக நயன்தாரா இப்படத்தில் நடிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.