ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் முதல் மஹிந்தராவின் 5 இருக்கை தார் வரை…2024-ம் அறிமுகமாகும் 5 SUV கார்கள்..!

2024-ம் ஆண்டு பிறந்து இரண்டு மாதம் முடிவடைவதற்குள் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மற்றும் கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட் காரக்ள் இந்தியாவில் அறிமுகமாகிவிட்டது. அடுத்த சில மாதங்களில் பல புதிய SUV கார்கள் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. அதில் ஐந்து கார்களின் விவரங்களை மற்றும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

ஹூண்டாய் கிரெட்டா N-லைன் : கிரெட்டா N-லைன் கார் மார்ச் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. ஏற்கனவே i20 N-லைன் மற்றும் வீனுயூ N-லைன் கார்கள் உள்ள நிலையில், இது ஹூண்டாயின் மூன்றாவது N-லைன் வரிசையாகும். 1.5 லிட்டர் காப்பா டர்போ பெட்ரோல் இஞ்சினில் இயங்கும் கிரெட்டா N-லைன், அதிகபட்சமாக 160PS பவரையும் 253Nm இழுவிசையும் கொண்டுள்ளது. மேலும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இந்தக் காரில் உள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா N-லைன் : கிரெட்டா N-லைன் கார் மார்ச் 11-ம் தேதி இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. ஏற்கனவே i20 N-லைன் மற்றும் வீனுயூ N-லைன் கார்கள் உள்ள நிலையில், இது ஹூண்டாயின் மூன்றாவது N-லைன் வரிசையாகும். 1.5 லிட்டர் காப்பா டர்போ பெட்ரோல் இஞ்சினில் இயங்கும் கிரெட்டா N-லைன், அதிகபட்சமாக 160PS பவரையும் 253Nm இழுவிசையும் கொண்டுள்ளது. மேலும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 7-ஸ்பீடு DCT கியர்பாக்ஸ் ஆப்ஷனும் இந்தக் காரில் உள்ளது.

ஹூண்டாய் அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் : 2021-ம் ஆண்டில் 6/7 இருக்கைகள் கொண்ட அல்கஸார் காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்தியது. டாடா சஃபாரி மற்றும் மஹிந்தரா XUV700 கார்களுக்கு சிறந்த போட்டியாக இருக்கும் அல்கஸார், முதல்முறையாக அப்டேட் பெறுகிறது. அல்கஸார் ஃபேஸ்லிஃப்ட் வடிவமைப்பு கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் போலவேதான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக ADAS வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இஞ்சின் ஆப்ஷனைப் பொறுத்தவரை, 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் (6MT மற்றும் 7DCT கியர்பாக்ஸ்) மற்றும் 1.5 லிட்டர் டீசல் (6MT மற்றும் 6AT கியர்பாக்ஸ்) உள்ளது.

டாடா கர்வ் : இந்த ஆண்டு அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கும் SUV கார் டாடா Curvv-ஆகத்தான் இருக்கும். அதிக போட்டி நிறைந்த மிட் சைஸ் SUV பிரிவில் களமிறங்குகிறது கர்வ். ஏற்கனவே இப்பிரிவில் கியா செல்டாஸ், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுசுகியின் கிராண்ட் விடாரா போன்ற பிரபலமான கார்கள் இருக்கின்றன. ஏற்கனவே பஞ்ச், நெக்ஸான், ஹேரியர், சஃபாரி என வலிமையான SUV கார்களை தன்னிடம் வைத்துள்ளது டாடா மோட்டார்ஸ். புதிதாக அறிமுகமாகவுள்ள டாடா கர்வ், இண்டர்னல் கம்பஸ்டன் இஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் என இரண்டு ஆப்ஷனில் வரவுள்ளது.

மஹிந்தரா XUV300 ஃபேஸ்லிஃப்ட் : XUV300 காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது மஹிந்தரா நிறுவனம். அப்டேட் செய்யப்பட்ட மாடலின் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் பலவித மாற்றங்கள் செய்யப்படிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேபினுள்ளும் பல புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய XUV300 ஃபேஸ்லிஃப்ட் காரின் இஞ்சினைப் பொறுத்தவரை, 1.2 லிட்டர் டர்போ மல்டிபாய்ண்ட் ஃபூயில் இஞ்செக்ஷன் (TCMPFI) பெட்ரோல், 1.2 லிட்டர் mStallion டர்போ கேஸோலின் (TGDi) பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இஞ்சின் என மூன்று ஆப்ஷனில் வருகிறது. மேலும் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்லீடு ஆடோமெட்டிக் கியர்பாக்ஸ் வசதியும் இந்தக் காரில் உள்ளது.

மஹிந்தராவின் 5 இருக்கைகள் கொண்ட தார் : 2024-ம் ஆண்டின் நடுப்பகுதியில் 5 இருக்கைகள் கொண்ட மஹிந்தரா தார் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. LED ஹெட்லைட், LED DRL, புதிய வடிவமைப்பில் அலாய் வீல் என பல அப்டேட்டுகள் இந்தக் காரில் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், எலக்ட்ரிக் சன்ரூஃப் போன்றவையும் இந்தக் காரில் எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுசுகி ஜிம்னி மற்றும் விரைவில் அறிமுகமாகவுள்ள ஃபோர்ஸ் நிறுவனத்தின் கூர்கா போன்றவை இந்தக் காரின் போட்டியாளர் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *