இனி வீட்டிலேயே உளுந்து வைத்து உடனடியாக மொறு மொறுவென்று முறுக்கு செய்யலாம்… ரெசிபி இதோ.!

முறுக்கு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. நாம் இங்கே காணப்போகும் முறுக்கு ரெசிபியை வீட்டிலேயே எளிதாக செய்துவிடலாம்.

அப்புறம் என்ன இனி தினமும் மாலை நேர ஸ்னாக்காக காபி அல்லது டீயுடன் இந்த மொறு மொறு உளுந்து முறுக்கை வைத்து சுவையாக அனுபவிக்கலாம்.

தேவையான பொருட்கள் :

முழு வெள்ளை உளுந்து – 1 கப்

அரிசி மாவு – 4 கப்

உப்பு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

வெள்ளை எள் – 2 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர்

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் 14 கப் முழு வெள்ளை உளுந்தை தண்ணீர் சேர்த்து இரண்டு மூன்று முறை நன்றாக அலசி கொள்ளுங்கள்.

குறிப்பு : முழு உளுந்து சேர்த்தால் முறுக்கு நல்லா மொறு மொறு என்று வரும்.

அடுத்து அடுப்பில் குக்கர் வைத்து அதில் கழுவிய உளுந்தை சேர்த்து எந்த கப்பில் உளுந்தை அளந்து சேர்த்தோமோ அதே கப்பில் 3 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து தீயை அதிகமாக வைத்து 5 விசில் வரும்வரை வேகவிடவும்.

5 விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்தது விசில் அடங்கியவுடன் வேகவைத்த உளுந்தை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக மசிய அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.

அரைத்த உளுந்து மாவை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் நன்கு கட்டிகள் இல்லாமல் சலித்து எடுத்த அரிசி மாவை சேர்த்து கொள்ளுங்கள்.

பின்னர் அவற்றுடன் தேவைக்கேற்ப உப்பு, கையால் நுனிக்கிய சீரகம் மற்றும் வெள்ளை எள் சேர்க்க வேண்டும்.

பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் அதையும் அந்த மாவில் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.

முறுக்கு மாவு சாப்டாக மாறும்வரை கைகளை கொண்டு நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

குறிப்பு : தேவையென்றால் முறுக்கு மாவிற்கு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். மேலும் முறுக்கு மாவு சாப்பிட்டாக இருந்தால் தான் எண்ணெய்யில் பிரிந்து வரமால் இருக்கும்.

அடுத்து அடுப்பில் வாணலி வைத்து அதில் முறுக்கு சுட்டு எடுக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடு செய்து கொள்ளுங்கள்.

தற்போது முறுக்கு செய்யும் உரலை எடுத்து அதில் தேவையான அளவு முறுக்கு மாவை நிரப்பி ஒரு தட்டை எடுத்து எண்ணெய் தடவி அதன் மீது வட்டமாக முறுக்கை பிழிந்து கொள்ளுங்கள்.

பிறகு நன்றாக சூடான எண்ணெயில் பிழிந்து வைத்துள்ள முறுக்கை சேர்த்து நன்கு வேகா விடவும்.

ஒருபுறம் நன்கு வெந்ததும் முறுக்கை மறுபுறத்திற்கு திருப்பி நன்றாக வேகா விடவும்.

முறுக்கு முழுவதும் வெந்தது எண்ணெய்யின் சலசலப்பு தன்மை அடங்கியவுடன் எண்ணெய்யை வடிகட்டி முறுக்கை எடுத்து சூடாக பரிமாறவும்…

இந்த உளுந்து முறுக்கை ஒரு இறுக்கமான முடி உள்ள பாத்திரத்திற்கு மாற்றி மூடி போட்டு பல நாட்களுக்கு மொறு மொறுப்பு தன்மை போகாமல் வைத்திருக்கலாம்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *