பொங்கல் பரிசு முதல் கிளாம்பாக்கம் வரை அடுத்தடுத்து அரசு ஏற்றுக்கொண்ட 3 முக்கியமான விஷயங்கள்
சென்னை: சென்னை வெள்ளம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், பொங்கல் பரிசு வரை மக்கள் வைத்த முக்கிய கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு ஏற்றுக்கொண்டிருப்பதை பலரும் வரவேற்கிறார்கள்.
அதை பற்றி இப்போது பார்ப்போம்.
ஒரு நல்ல அரசு என்பது விமர்சனங்களையும், மக்கள் சொல்லும் குறைகளையும் கண்டு அதனை உடனடியாக சரி செய்வது தான். அந்த வகையில் கடந்த டிசம்பரில் இருந்து எதிர்பார்க்காத வகையில் பல சவால்களை சந்தித்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் கிட்டத்தட்ட 2015ல் ஏற்பட்டதை விட அதிகம்.. மிக கடுமையான பாதிப்பை சென்னை சந்தித்தது.
அப்போது பொதுமக்களுக்கு அரசு வெள்ள நிவாரணம் அறிவித்தது. இதன்படி, சென்னையில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் 6000 நிவாரணம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படியே நிவாரணம் வழங்கியது. அதேநேரம் வருமான வரி கட்டுவோர், அரசு ஊழியர்கள் விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு ஆய்வு செய்து விட்டு தரப்படும் என்றும் அறிவித்தது.
அதேநேரம் வெளியூர் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள், நீண்ட காலமாக சென்னையில் வசிக்கும் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு வெள்ள நிவாரணம் அறிவிக்கப்படாததால் மக்களிடையே விமர்சனங்கள் எழுந்தன. மேலும் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு அவர்களுக்கு வெள்ள நிவாரணம் அளிக்கப்படும் என்று தனது நிலைப்பாட்டை மாற்றி அறிவித்தது. 5 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ள நிலையில் அவர்களுக்கு விரைவில் நிவாரணம் அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இரண்டாவது விஷயம் கிளாம்பாக்கம்: டிசம்பர் 30ம் தேதி திடீரென சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. அந்த பேருந்து நிலையத்திற்கு அடிப்படை வசதிகள் குறித்த குறைகளை மக்கள் கூறினார்கள். கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்ததற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு எதிர்கொண்ட விமர்சனங்களும், எதிர்ப்புகளும் மிக அதிகம். அதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. நீண்ட தூரம் தான். வடசென்னை மக்களுக்கு செட் ஆகவில்லை என்பது தான்.
இன்னொரு முக்கிய பிரச்சனை என்னவென்றால், கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைக்காதது தான். அதை அமைக்க வேண்டியது தெற்கு ரயில்வே ஆகும். இந்நிலையில் தமிழக அரசு கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கி அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.