பூரி முதல் இட்லி வரை, எல்லாத்துக்கும் ஒரே குருமா: சூப்பராக இருக்கும், ஈசி ரெசிபி!

ஒருமுறை தக்காளி குருமா இப்படி செய்து பாருங்க. செம்ம ருசியா இருக்கும்.

தேவையான பொருட்கள்

எண்ணெய்

சீரகம் 1 ஸ்பூன்

கடலை பருப்பு 1 ஸ்பூன்

4 பெரிய வெங்காயம் நறுக்கியது

கருவேப்பிலை

1 ஸ்பூன் இஞ்சி – பூண்டு பேஸ்ட்

3 பச்சை மிளகாய்

தக்காளி 4 நறுக்கியது

உப்பு

2 ஸ்பூன் மிளகாய் தூள்

 

2 ஸ்பூன் மல்லித் தூள்

1 ஸ்பூன் மஞ்சள் தூள்

அரை ஸ்பூன் கரம் மசாலா

அரை மூடி தேங்காய்

1 ஸ்பூன் சோம்பு

செய்முறை : எண்ணெய் உற்றி , சீரகம், கடலை பருப்பு சேர்த்து வதக்கவும். தொடர்ந்து வெங்காயம் சேர்க்கவும். கருவேப்பிலை சேர்க்கவும். இதை நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து இஞ்சி – பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளரவும். தொடர்ந்து பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து கிளர வேண்டும். நன்றாக வதங்கியதும், மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தொடர்ந்து இதில் தேங்காய் – சோம்பு அரைத்ததை சேர்க்கவும். அரைக்கும் போது நன்றாக அரைத்துகொள்ள வேண்டும் . 10 நிமிடங்கள் வரை கொதிக்கவும். சுவையான தக்காளி குருமா ரெடி.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *