Royal Enfield முதல்.. KTM வரை.. இம்மாதம் இந்திய சந்தையில் அறிமுகமாகும் மாஸ் பைக்ஸ் – விலை & ஸ்பெக் இதோ!
Bikes Launch in March : இந்த மார்ச் மாதம் பல முன்னணி நிறுவனங்கள் தங்களுடைய பைக்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
KTM 125 Duke 2024
ஆஸ்திரேலியா நாட்டு இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் என்றாலும், இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெறும் கேடிஎம் நிறுவன பைக்குகளின் “கேடிஎம் 125 டூக் 2024” பைக்குகள் இம்மாத இறுதிக்குள் இந்தியாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் சுமார் 1,75,000 முதல் 1,80,000 என்கின்ற விலையில் இது அறிமுகமாக வாய்ப்புகள் உள்ளது.
Royal Enfield roadster 450
பல ஆண்டுகாலமாக இந்திய மக்கள் பலரின் கனவு வாகனமாக இருந்து வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய “ரோட்ஸ்டர் 450” பைக்கை இந்திய சந்தையில் வருகின்ற மார்ச் 15ஆம் தேதிக்குள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் முதல் 2 லட்சத்து 60 ஆயிரம் என்கின்ற விலையில் இது அறிமுகமாகலாம்.
Bajaj Pulsar 400
பல ஆண்டு காலமாக விற்பனையில் பெரிய அளவில் சாதனை படைத்து விடும் பல்சர் பைக்களின் புதிய மாடல் ஒன்று இந்த மார்ச் மாதம் வெளியாக உள்ளது. பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 400ஐ அண்மையில் அறிமுகம் செய்தது. இந்தியாவில் மார்ச் மாத இறுதியில் இந்த பைக் வெளியாக உள்ளது. ஏற்கனவே பல்சர் தனது என்எஸ்160 மற்றும் என்எஸ் 200 பைக்குகளை வெளியிட்டுள்ள நிலையில், புதிய பல்சர் 400 பைக் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்திய சந்தையில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Moto Guzzi v9
இத்தாலி நாட்டு இருசக்கர வாகன விற்பனை நிறுவனமான Moto Guzzi தனது புதிய மாடல் பைக் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 853சிசி திறன்கொண்ட இந்த வண்டி சுமார் 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இந்திய சந்தையில் சுமார் 14 லட்சம் ரூபாய்க்கு இது விற்பனை ஆகலாம் என்று கூறப்படுகிறது.