சரும பராமரிப்பு முதல் உடல் ஆரோக்கியம் வரை… வேப்பிலையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்..
ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டிருப்பதால் வேப்பிலை மிகவம் பிரபலமாக இருக்கிறது. வேப்பிலைகள் மற்றும் அதன் சாறு ஆன்டிசெப்டிக் பண்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் என பல பண்புகளை கொண்டுள்ளன.
பல உடல்நல பிரச்னைகளை எதிர்த்து போராட வேப்பிலை பயனுள்ளதாக இருப்பதால் பலரும் நீண்ட காலமாக அவற்றை பயன்படுத்துகின்றனர். கசப்பு தன்மையை கொண்டிருந்தாலும் இதில் ஏராளமான நல்ல கலவைகள் இருப்பதால் உணவு மற்றும் பானங்களுக்கு ஒரு சிறப்பு சுவை சேர்க்க வேப்பிலைகளை சமையலிலும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். வேப்பிலைகள் சருமபராமரிப்பு பொருட்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. பல நல்ல மருத்துவ குணங்களை கொண்டிருந்தாலும் இதை எப்போதும் அளவாகவே பயன்படுத்த வேண்டும்.
வேப்பிலைகள் தரும் ஆரோக்கிய நன்மைகள் இங்கே:
– பாக்டீரியா மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராடும் இயற்கையான சேர்மங்கள் வேப்பிலைகளில் நிறைந்துள்ளன. எனவே வேப்பிலைகள் தொற்றுகளை தடுக்க உதவுகிறது.
– வேப்பிலைகளில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், நம் உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் அழற்சிகள் மற்றும் அசௌகரியத்தை குறைக்க பெரிதும் உதவுகின்றன.
– பல பொதுவான சரும பராமரிப்பு பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க வேப்பிலைகள் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முகப்பரு மற்றும் எக்சிமா போன்ற பிரச்னைகளுக்கு வேப்பிலைகள் நிவாரணம் அளிக்கின்றன. சருமத்திற்கு தெளிவான நிறத்தை அளிக்கிறது.
– சரும ஆரோக்கியம் மட்டுமல்ல பற்களின் ஆரோக்கியத்திற்கும் கூட வேப்பிலைகள் உதவுகின்றன. வேப்பிலைகளை நன்கு மென்று சாப்பிடுவது அல்லது வேம்பு சேர்க்கப்பட்டடூத் பேஸ்ட்டை பயன்படுத்துவது ஈறு சார்ந்த பிரச்னைகள் மற்றும் பல் சொத்தை ஏற்படாமல் தடுகிறது. இதன் மூலம் வாய்வழி ஆரோக்கியத்தை வேப்பிலைகள் பாதுகாக்கின்றன.
– வேப்பிலைகளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவி தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.
– வேப்பிலைகள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவ கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே வேப்பிலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
– வேப்பிலைகளில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் நல்ல செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. மேலும் இரைப்பை குடல் சார்ந்த பிரச்னைகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது.
– வேப்பிலைகளை பேஸ்ட்டாக அரைத்து காயங்களின் மீது தடவினால், காயம் வேகமாக குணமடையும் மற்றும் தொற்றகளை தடுக்கலாம்.
– வேப்பிலைகளில் உள்ள சில சேர்மங்கள் கேன்சர் எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் கேன்சர் எதிர்ப்பில் வேப்பிலைகளின் முழு திறனையும் புரிந்து கொள்ள மேலும் ஆராய்ச்சிகள் தேவை.
– வேப்பிலைகள் பொடு பிரச்னைக்கு நிவாரணம் அளிக்கிறது. மேலும் உச்சந்தலைக்கு ஊட்டமளிப்பதோடு, கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
வேப்பிலையின் சமையல் பயன்பாடுகள்:
கசப்பான சுவை கொண்டதாக இருந்தாலும் வேப்பிலைகளினால் கிடைக்கும் நன்மைகளை பெற இவை சமையலிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
– சூப்ஸ், குழம்பு மற்றும் கறிகளுக்கு தனித்துவமான கசப்பு சுவை சேர்க்க வேப்பிலைகள் சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் வேப்பிலை சேர்ப்பதால் ஏற்படும் கசப்பை சரி செய்ய சில நறுமண மசாலாப் பொருட்களை சேர்த்து கொள்ளலாம்.
– ஊறுகாய் வகைகளில் வேப்பிலைகளை சேர்த்து அவற்றின் சுவையை அதிகரித்து கொள்ளலாம். ஊறுகாயில் வேப்பிலைகளை சேர்ப்பதால் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.
– நீங்கள் அரைக்கும் சட்னி வகைகளில் பிற பொருட்களுடன் சேர்த்து வேப்பிலைகளையும் கலந்து தயாரித்து சாப்பிடுவது ஊட்டச்சத்தை அதிகரிக்க செயயும்.
– பிரியாணி அல்லது புலாவ் போன்றவற்றிலும் கூட வேப்பிலைகளை சேர்க்கலாம். இது இந்த அரிசி உணவுகளுக்கு தனித்துவ சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.
– வேப்பிலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம். எனவே இதை தண்ணீரில் கொதிக்க வைத்து ஹெர்பல் டீ தயாரித்து பருகுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.
வேப்பிலைகளினால் ஏற்படும் சில பக்கவிளைவுகள்:
பல நன்மைகளை அளித்தாலும் வேப்பிலைகளை அதிகமாக எடுத்து கொள்வதால் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
– வேப்பிலைகளை அதிகம் சாப்பிடுவது செரிமான கோளாறு, குமட்டல் அல்லது வயிற்று வலி ஏற்பட வழிவகுக்கும்.
– வேம்பினால் அலர்ஜி ஏற்படுபவர்கள் வேப்பிலைகளை பயன்படுத்தினால் அரிப்பு, சருமம் சிவத்தல் அல்லது அழற்சி போன்ற அலர்ஜி ரியாக்ஷன்களை எதிர்கொள்ள நேரிடலாம்.
– நீண்ட காலம் தொடர்ச்சியாக அல்லது அதிகமாகவும் வேப்பிலைகளை உட்கொள்வது சிறுநீரகங்களை பாதிக்க கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
– ஒருபக்கம் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுபடுத்த வேப்பிலைகள் உதவினாலும் மறுபக்கம் இவற்றை அதிகமாக எடுத்து கொள்வது ரத்த சர்க்கரை அளவை எதிர்மறையாக பாதிக்கலாம். எனவே நீரிழிவு நோயாளிகள் வேப்ப இலைகளை உட்கொள்ளும் முன் உரிய நிபுணருடன் கலந்தாலோசித்து கொள்ள வேண்டும்.
– வேப்பிலைகள் ரத்த அழுத்தத்தை குறைக்க கூடும். எனவே ஏற்கனவே குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வேப்பிலை நுகர்வில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.