இன்று முதல் ஆவின் ஐஸ்கிரீம்கள் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்வு..!
தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தில் பால் விற்பனையுடன் நெய், தயிர், பாதாம் பவுடர், குல்பி, பால் பவுடர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தயாரித்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆவின் நிறுவனம் சார்பில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களின் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி, 65மி.லி. சாக்கோபார் ரூ.20ல் இருந்து ரூ.25 ஆகவும், 125 மி.லி. பால் வென்னிலா ரூ.28ல் இருந்து ரூ.30 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, 100 மி.லி. கிளாசிக் கோன் வென்னிலா மற்றும் கிளாசிக் கோன் சாக்லேட் ரூ.30ல் இருந்து ரூ.35 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.