5 நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பு: பிரித்தானியாவில் உருவாகியுள்ள அச்சம்

பிரித்தானியாவில், மின்சாரம் தயாரிப்பதற்கான எரிபொருள் கையிருப்பு, ஐந்து நாட்களுக்கு மட்டுமே உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

5 நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பு

பிரித்தானியாவின் மின் உற்பத்தியில் 40 சதவிகிதம் எரிபொருள் மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்நிலையில், பிரித்தானியாவிடம் மின்சாரம் தயாரிப்பதற்கான எரிபொருள் கையிருப்பு ஐந்து நாட்களுக்கு மட்டுமே உள்ளதாக எதிர்க்கட்சியான லேபர் கட்சி தெரிவித்துள்ளது.

அதனால் பிரித்தானியா இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படலாம் என அச்சம் உருவாகியுள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

இதுவே, அண்டை நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இத்தாலியில், சராசரியாக 175 நாட்களுக்கான, அதாவது, பிரித்தானியாவை ஒப்பிட்டால், 35 மடங்கு அதிக எரிபொருள் உள்ளது.

எரிபொருள் விலை குறைவாக இருக்கும்போதே அதை வாங்கி சேமித்திருக்கவேண்டும், இப்போதோ, விலை அதிகமாகிவிட்டது. ஆகவே, அதிக செலவு செய்து எரிபொருள் இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என லேபர் கட்சி சாடியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *