ஃபன் போனிடெயில் வீடியோ: உங்க புடவைக்கு ஏற்ற பொருத்தமான ஹேர் ஸ்டைல்
பெண்களையும், கூந்தலையும் பிரிக்க முடியாது. டீன் ஏஜ் பெண்கள் முதல் வயதான பாட்டி வரை, தங்கள் உடல் ஆரோக்கியத்தை கவனிப்பதை விட, கூந்தல் நன்றாக இருக்கவும், வளரவும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மெனக்கெடுகின்றனர்.
ஆனால், எவ்வளவு தான் தலைமுடி நன்றாக வளர்ந்தாலும், சில நேரங்களில் என்ன ஹேர் ஸ்டைல் செய்வது என்று குழப்பமாக இருக்கும். அதனாலே பெரும்பாலும் கூந்தலை ஜடை பிண்ணியோ, அல்லது எளிதாக கொண்டை போட்டோ பல பெண்கள் தங்கள் சிகையலங்காரத்தை முடித்துக் கொள்கின்றனர்.
அதுவும் குறிப்பாக, புடவை கட்டும் போது, என்ன ஹேர் ஸ்டைல் செய்வது என்பது பல பெண்களுக்கு புதிராகவே இருக்கும்.
உங்களுக்காகவே, நேஹா சாஹூ இன்ஸ்டாகிராமில் ஒரு சிம்பிள் போனிடெயில் வீடியோவை பகிர்ந்து கொண்டார், இது வழக்கமான போனிடெயில் போல அல்லாமல், டிரெண்டியாக இருக்கும். மேலும் இதை செய்ய சில நிமிடங்களே போதும்.
முதலில் எப்போதும் போனிடெயில் போடுவது போல, உங்கள் கூந்தல் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, ஒரு ஹேர்பேண்ட் மூலம் கட்டவும். உங்கள் தலைமுடி மிகவும் இறுக்கமாக இழுக்காமல் இருப்பதையும், மிகவும் தளர்வாக இருக்கக்கூடாது என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இப்போது வீடியோவில் காட்டியபடி, ரப்பர் பேண்டிற்கு மேலே, கூந்தலை சற்று பிரித்து, ஏற்கெனவே போட்டுவைத்த போனிடெயிலை அப்படியே, அந்த இடைவெளியில் லேசாக திணிக்கவும். உங்கள் டிரெண்டி போனிடெயில் ரெடி. இறுதியாக உங்கள் கூந்தலை கொஞ்சம் சரிசெய்து, முழுமையான தோற்றத்துக்கு ஒரு ப்ரூச் பின் அல்லது பூக்கள் வைத்து அலங்கரிக்கவும்.