கங்குலினியின் 1.6 லட்சம் மதிப்புள்ள போன் திருட்டு; முக்கியமான டேட்டாவை பாதுகாக்க காவல் நிலையத்தில் புகார்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியின் கொல்கத்தா பெஹாலா வீட்டிருருந்து ரூ.1.6 லட்சம் மதிப்பு கொண்ட அவரது மொபைல் போன் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை 11.30 மணியளவில் அவரது மொபைல் போனை தேடியிருக்கிறார். ஆனால், அதனை காணவில்லை.

இதனால், அதிர்ச்சி அடைந்த கங்குலி தாகூர்புகூர் காவல் நிலையத்தில் அளித்துள்ளார். காசு ஒரு பெரிய மேட்டரே இல்லாத நிலையில் அதில் முக்கியமான டேட்டா இருக்கும் நிலையில் கங்குலி அச்சமடைந்துள்ளார். இது குறித்து கங்குலி கூறியிருப்பதாவது: என்னுடைய போன் வீட்டிலிருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். கடந்த ஜனவரி 19 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு தான் போனை பார்த்தேன். பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால், கவலை அடைந்தேன். ஏனென்றால், அதில், பலருடைய போன் நம்பரும், என்னுடைய தனிப்பட்ட டேட்டாவும், அக்கவுண்ட்ஸும் அந்த போனில் தான் இருக்கிறது. இதன் காரணமாக தனது போனை டிராக் செய்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் காவல் துறையிடம் கூறியுள்ளார். மேலும், அந்த போனில் தனிப்பட்ட டேட்டா இருக்கும் நிலையில் அது கசிந்தால் தனக்கு பெரிய சிக்கல்களை ஏற்படுத்தும் என்று அச்சமடைந்துள்ளார். இதையடுத்து, காவல்துறையினர் கங்குலியின் போனை தேடும் முயற்சியில் இறங்கியிருக்கின்றனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *