பிசிசிஐக்கு கங்குலி சூப்பர் யோசனை.. எதிர்காலத்தில் பெரிய சிக்கல் இருக்கு.. கவலையே இல்லாம மாத்துங்க
ஒரு காலத்தில் இந்தியாவில் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது என்றால் டிராவிட், லக்ஷ்மன் போன்ற வீரர்கள் எல்லாம் மிகப்பெரிய சதத்தை அடிப்பார்கள். டிராவிட் எல்லாம் தனி ஆளாக நின்று 300 பந்துகள் எதிர்கொள்வார்.
ஆனால் அப்படிப்பட்ட ஒரு பேட்டிங்கை இந்திய ரசிகர்களால் சமீப காலமாக பார்க்க முடியவில்லை. குறிப்பாக இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது என்றால் அது நிச்சயமாக ஐந்து நாட்கள் முழுவதும் நடந்தால் கூட டிராவாக வாய்ப்பு நிறைய இருக்கிறது.
ஆனால் தற்போது டிரா என்ற முடிவு வருவதில்லை. போட்டி நான்கு நாட்களில் எல்லாம் முடிவடைந்து விடுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, பிசிசிஐ க்கு ஒரு யோசனை கொடுத்திருக்கிறார். அதில் இனி இந்தியாவில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை தயார் செய்ய வேண்டும் என்ற நிலை சுத்தமாக இல்லை.
ஏனென்றால் எப்போதெல்லாம் பும்ரா, சமி, சிராஜ், முகேஷ் குமார் ஆகியோர் பந்து வீசுவதை நான் பார்க்கிறேனோ! அப்போதெல்லாம் இன்னுமா நமக்கு சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளம் தேவை என்று யோசனை வருகிறது. மேலும் இந்தியாவில் நல்ல ஆடுகளத்தை தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் மேலோங்கி வருகிறது.
நீங்கள் எந்த ஒரு ஆடுகளத்தை கொடுத்தாலும் நமது இந்திய பவுலர்கள் 20 விக்கெட்டை நிச்சயம் எடுத்துக் கொடுப்பார்கள். அதிலும் அஸ்வின், ஜடேஜா, குல்தீப், அக்சர் பட்டேல் ஆகியோர் இந்த வேகப்பந்துவீச்சாளர்களுடன் இணைந்தால் நிச்சயமாக கிரிக்கெட் வேட்டை நடக்கும். ஆனால் என்னுடைய கவலையே இந்தியாவில் பேட்டிங் தரம் மிகவும் குறைந்து வருகிறது.
இதற்கு காரணம் கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக நமது சொந்த ஊரில் பயன்படுத்தப்படும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் தான். எந்த ஒரு வீரர்களாலும் சரியாக விளையாட முடியவில்லை. எனவே இதனை கருத்தில் கொண்டு நாம் ஒரு நல்ல ஆடுகளத்தை தயார் படுத்த வேண்டும். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தை உருவாக்கினால் தான் இளம் வீரர்கள் அதில் நன்றாக விளையாடி ரன்கள் அடிப்பார்கள்.
மேலும் ஐந்து நாட்கள் போட்டி நிச்சயம் நடைபெறும். இறுதியில் இந்தியா வெற்றி பெறும் என்று கங்குலி வலியுறுத்தியுள்ளார். இந்தியா மோசமான ஆடுகளத்தில் விளையாடுவதால் தான் பல வீரர்கள் தடுமாறுவதாக ஏற்கனவே ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் கங்குலி அதே கருத்தை கூறியிருக்கிறார்.