Garlic Benefits: இதய நோய், புற்றுநோய் வராமல் தடுக்கும் பூண்டு
சமையலில் முக்கியமாக பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு ஆரோக்கிய நன்மையைக் கொண்டுள்ளது. குறித்த நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பூண்டின் நன்மைகள்
பூண்டில் அல்லிசின் என்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ள நிலையில், இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளி, காய்ச்சல் போன்ற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கின்றது.
மேலும் இவை ரத்த நாளங்களை விரிவுபடுத்தி, இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றது.
பூண்டு HDL என்ற நல்ல கொழுப்பின் அளவை அதிகரித்து, LDL என்ற கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கின்றது. இதனால் இதய நோய் அபாயம் குறைகின்றது.
பூண்டானது சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது. புற்று நோய் செல்கள் வளர்ச்சியடைவதை தடுக்கின்றது.
வயிறு உப்புசம், அஜீரணம் பிரச்சினையை சரிசெய்து செரிமான சக்தியை அதிகரிக்கின்றது.