Garlic Kulcha: குளிர்கால மாலையில் ருசிக்க பூண்டு குல்சா – செய்வது எப்படி?

குளிர்காலம் நம்மை வெப்பத்திற்கு ஏங்க வைக்கிறது எனலாம். இக்கால கட்டத்தில் சூடான தேநீர், நெருப்பு அனலில் நண்பர்களுடன் அரட்டை மற்றும் மனதுக்குப் பிடித்தவர்களுடன் பிடித்த உணவினை உண்பது என பல நல்ல விஷயங்கள் நடப்பவை இயல்பு.

அப்படி குளிர்காலத்தில் உண்ண ஏற்ற ஒரு உணவுதான், பூண்டு குல்சா. காலை உணவு முதல் மாலை சிற்றுண்டி வரை, குல்சா எப்போதும் சாப்பிட ஏற்ற உணவாகும். வீட்டிலேயே பச்சை பூண்டு குல்சா தயாரிப்பது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

வெள்ளைப் பூண்டு – சிறிதளவு;

சுத்திகரிக்கப்பட்ட மைதா மாவு – 2 கப்;

உலர்ந்த ஈஸ்ட் – 1 டீஸ்பூன்;

உப்பு – தேவையான அளவு;

விளக்கெண்ணெய் – 1 டீஸ்பூன்;

வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

சிறு வெங்காயம் – சிறிதளவு

செய்முறை:

சுத்திகரிக்கப்பட்ட மைதா மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு, உலர்ந்த ஈஸ்ட், உப்பு, விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அதன் நடுவில், உருக்கிய வெண்ணெய், தயிர் மற்றும் 3/4 கப் நீர் சேர்க்கவும். பின், மைதாவை நன்கு பிசைந்து தனியே எடுத்து வைக்கவும்.

பிறகு பச்சைப் பூண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். மாவு உருண்டையை, ஒரு டிஸ்க்கில் வைத்து சப்பாத்தி போல் உருட்டவும். மேலே நறுக்கிய பச்சை பூண்டு மற்றும் வெங்காய விதைகளை தூவி எல்லாவற்றையும் ஒன்றாக சப்பாத்தி மேல் மூடி அழுத்திக் கொள்ளவும்.

சூடான வாணலியில், அடிப்பகுதியில் சிறிது நீர் ஊற்றி, வாணலியின் பக்கவாட்டில் தயார் செய்த, வெள்ளைப் பூண்டுடன் அழுத்தப்பட்ட மைதா மாவினை வாணலியின் பக்கவாட்டில் மாற்றி மாற்றி வேகும் வரை வைத்து எடுக்கவும். அதாவது ஒரு இட்லியை அவிழ்ப்பதுபோல் வைத்து எடுக்கவும்.

இறுதியாக புதினா சட்னி, எலுமிச்சை துண்டுகள் இணைத்து பரிமாறலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *